Home
News

ரூ.300 பட்ஜெட்டில் Airtel, Jio, Vi, BSNL வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்: எது சிறந்தது?

ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்கின்றன. அதேபோல் இந்நிறுவனம் 5ஜி சேவையை வழங்கத் தொடங்கிவிட்டன.

 ரூ.300 பட்ஜெட்

ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் 4ஜி சேவையைக் கூட வழங்கவில்லை. ஆனாலும் கம்மி விலையில் அசத்தலான சலுகைகளை வழங்கும் திட்டங்களை வைத்துள்ளது இந்நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வரும், அதாவது ரூ.300 பட்ஜெட்டில் இந்நிறுவனங்கள் வழங்கும் திட்டங்கள் மற்றும் அவற்றின் நன்மைகளை இப்போது பார்ப்போம்.

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர jioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது இந்த திட்டம்.

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. Free Hello Tunes மற்றும் Wynk Music ஒரு மாத இலவச சோதனை போன்ற நன்மைகளையும் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்.

வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர Vi Movie & TV கிளாசிக், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங் ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட் போன்ற சலுகைகள் இந்த வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.

 பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் பயனர்கள் ரூ.300 பட்ஜெட்டில் ஒரு திட்டத்தை விரும்பினால் ரூ.299 திட்டத்தை விட ரூ.269 திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. அதாவது பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்,ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவை சந்தா உள்ளிட்ட சில நன்மைகள் வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

எது சிறந்தது?

எது சிறந்தது?

அதிக வேலிடிட்டி உடன் சிறந்த டேட்டா நன்மையை தேடும் பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. ஆனாலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் 4ஜி சேவையை வழங்கவில்லை. எனவே வேகமான இணையத்தைப் பயன்படுத்த முடியாது.

அற்புதமான சலுகை

அதேசமயம் ஜியோ நிறுவனமும் தனது 299 ப்ரீபெய்ட் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, ஆனால் கூடுதல் சலுகைகள் அதிகம் இல்லை என்பது தான் உண்மை. மறுபுறம் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களது 299 ப்ரீபெய்ட் திட்டத்தில் 1.5ஜிபி டேட்டாவை வழங்கினாலும் பல அற்புதமான சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக வோடபோன் ஐடியாவின் டேட்டா ரோல்ஓவர் சலுகை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. எனவே இதுபோன்ற
கூடுதல் சலுகைகளை வழங்கும் திட்டங்களைத் தேர்வு செய்வது நல்லது.

Best Mobiles in India

English summary
Airtel, Jio, Vi, BSNL Prepaid Plans Under Rs 300: Which is Best?: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X