ரூ.150 திட்டத்தில் சிறந்த நன்மைகளை வழங்கும் ஏர்டெல், ஜியோ, வி.!
அண்மையில் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை சில பயனர்களுக்கு இலவசமாக வழங்கின. மேலும் இந்த மூன்று நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு சிறந்த டேட்டா நன்மை மற்றும் அழைப்பு நன்மைகளை வழங்கி வருகின்றன. இப்போது இந்நிறுவனங்கள் வழங்கும் ரூ.150 திட்டங்களின் நன்மைகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்ததிட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். மேலும் எந்தநெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப் வசதிகளுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஏர்டெல் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.149 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் என்று கூறப்படுகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ், அமேசான் ப்ரைம் வீடியோவிற்கு இலவச அணுகல், ஏர்டெல் ஹலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆப் அணுகல் உள்ளிட்ட சில நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

வி(வோடபோன் ஐடியா) ரூ.148 ப்ரீபெய்ட் திட்டம்
அதிக டேட்டா தேவைப்படும் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் ரூ.148 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இதன் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். வோடபோன் ஐடியா நிறுவனத்திடம் இன்னொரு ரூ.148 ப்ரீபெய்ட் திட்டமும் உள்ளது, இது தினசரி 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி கூட 18 நாட்கள் தான். அண்மையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் வழங்கிய சிறப்பு சலுகைகளை பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 45 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்கியது, ஆனால் தற்போது 50 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தினசரி 2ஜிபி டேட்டா, இலவச அழைப்பு நன்மைகள் இந்த ரூ.198 ப்ரீபெய்ட்திட்டத்தில் கிடைக்கும். மேலும் பிஎஸ்என்எல் ட்யூன்களுக்கு பதிலாக இலவச லோக்தூன் உள்ளடக்கத்துடன் வருகிறது இந்த திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 1ஜிபி டேட்டா நன்மையை மட்டுமே வழங்கியது, ஆனால் தற்சமயம் இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 180ஜிபி டேட்டா நன்மையை பெற முடியும். இதுதவிர இலவச பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சந்தா மற்றும் ஜிங் மியூசிக் பயன்பாட்டு சந்தாவை இந்த திட்டத்தில் பெறமுடியும். மேலும் இலவச வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications