Home
News

யாரெல்லாம் பிஎஸ்என்எல் சேவையை கேலி செஞ்சீங்க.? உடனே சாரி சொல்லுடுங்க.!

பிஎஸ்என்எல், அதன் போட்டியாளர்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் போன்ற நிறுவங்களுடன் கடும் போட்டியை நிகழ்த்தும்முனைப்பின் கீழ் ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.

By Muthuraj

இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், அதன் போட்டியாளர்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் போன்ற நிறுவங்களுடன் கடும் போட்டியை நிகழ்த்தும்முனைப்பின் கீழ் ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.

யாரெல்லாம் பிஎஸ்என்எல் சேவையை கேலி செஞ்சீங்க.? உடனே சாரி சொல்லுடுங்க.!

இந்தியாவின் டெலிகாம் துறையில் என்ன ஆபர் அறிமுகமாக வேண்டும்.? அது என்ன விலையை கொண்டிருக்க வேண்டும்.? என்னென்ன நன்மைகளை வழங்க வேண்டும் என்பது நிர்ணயம் செய்யும் "சக்திகளான" ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களை எதிர்க்கும் அல்லது போட்டியிடும் நோக்கத்தின் கீழ், பிஎஸ்என்எல் அதன் நான்காவது தலைமுறை அல்லது 4ஜி சேவைகளுக்கான 2100 மெகாஹெர்ட்ஸ் பேன்டின் 5 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் ஸ்லாட்டை, மிக விரைவில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்என்எல்-ன் இந்த நகர்வானது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல்-க்கு மட்டுமின்றிமட்டுமிமேனரி வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனங்களுக்கும் எதிராக செய்லபடும் என்பது வெளிப்படை. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் அனுப் ஸ்ரீவஸ்தவா, "அடுத்த மாதம், 2100 மெகா ஹெர்ட்ஸில் 5 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் ஆனது ராஜஸ்தானை தவிர்த்து,சேவைகளுக்கான உரிமம் பெற்றுள்ள மீதமுள்ள 21 வட்டங்களில் அணுக கிடைக்கும். 800 மெகா ஹெர்ட்ஸ் ரேடியோ அலைகளில் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம்." என்று கூறியுள்ளார்.

டெலிகாம் துறையில் மிக உயர்ந்த முடிவுகளை எடுக்கும், டெலிகாம் கமிஷன் ஆனது, பிஎஸ்என்எல் உடன் நடக்கும் அடுத்த சந்திப்பில், 4ஜி வளியலைகளை அனுமதிப்பதற்காக முன்மொழிவு கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2100 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ஸ்பெக்ட்ரமின் கீழ், மூன்றாம் தலைமுறை (3ஜி) சேவையை வழங்கி வரும் பிஎஸ்என்எல், இனி அதை 4ஜி அடிப்படையிலான வாய்ஸ் மற்றும் டேட்டா சேவைகளுக்கு உகந்ததாக பயன்படுத்த விரும்புகிறது.

யாரெல்லாம் பிஎஸ்என்எல் சேவையை கேலி செஞ்சீங்க.? உடனே சாரி சொல்லுடுங்க.!

"2100 மெகாஹெர்ட்ஸ்-ன் கீழ் கூடுதலாக ஐந்து யூனிட்களில் 4ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளை வழங்குவதன் மூலம், பயன்படுத்தப்படாத ஸ்பெக்ட்ரம் வழங்கல் மீதான பயன்பாடுகள் அதிகரிக்கும். இதனால் 2ஜி, 3ஜி மற்றம் 4 ஜி சேவைகளை ஒரே நேரத்தில் வழங்கலாம்" என்று நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார் மிகப் பெரிய நெட்வொர்க் தடத்தினை கொண்டுள்ள பிஎஸ்என்எல், வெறும் ரூ.20/-க்கு 4ஜி சிம் கார்டை அறிவித்துள்ளதும், அதன் வழியாக 110 மில்லியன் நுகர்வோர்களை 4ஜி சிம் அல்லது யுஐஎம்ஐ-க்கு (யுனிவர்சல் சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கு) அப்கிரேட் செய்ய திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)

கடந்த மாதம் கர்நாடகாவின் ஷிவமோகா நகரில், பிஎஸ்என்எல் அதன் முதல் 4ஜி மொபைல் டவர் ஆப்ரேட்டரை நிறுவது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் பல தொலைத்தொடர்பு துறை சார்ந்தஅப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் டெலிகாம் பிரிவுடன் இணைந்து இருக்கவும்.

Best Mobiles in India

English summary
Airtel, Jio rival is ringing: Nod to BSNL's 4G launch on 2100 Mhz band soon. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X