ஏர்டெல், ஜியோ ரூ.149, ரூ.349 மற்றும் ரூ.399 திட்டங்களில் எது சிறந்தது?
ஏர்டெல் நிறுவனம் ரூ.349 ரீசார்ஜ் திட்டம் பொறுத்தவரை ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. இந்த திட்டம் மூலம் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்குகிறது.
ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது, இதனையடுத்து ஏர்டெல் மற்றும் ஜியோ பல சிறப்பு சலுகைகள் மற்றும் இலவச ஆபர்களை அறிவித்து வருகின்றன, மேலும் ஜியோ நிறுவனம் தற்சமயம் 4ஜி பீச்சர் போனை விற்பனைக்கு கொண்டுவருகிறது, இதனையடுத்து ஏர்டெல் நிறுவனமும் குறைந்த விலையில் 4ஜி பீச்சர் போனை விற்பனைக்கு கொண்டுவருகிறது.
தற்போது ஜியோ இன்டர்நெட் வேகம் சற்று வேகமாக உள்ளது என பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர், அதன்பின் ஏர்டெல் மற்றும் ஜியோ ரீசார்ஜ் திட்டங்களில் சில மாறுபாடுகள் உள்ளன. ரூ.8/- முதல் ரூ.399/- வரை புதிய ஆபர்களை தற்சமயம் அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம்.

ஏர்டெல் vs ஜியோ : ரூ.349 திட்டம்
ஏர்டெல் நிறுவனம் ரூ.349 ரீசார்ஜ் திட்டம் பொறுத்தவரை ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. இந்த திட்டம் மூலம் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம். மேலும் 28ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும்.
ஜியோ ரூ.349 ரீசார்ஜ் திட்டம் பொறுத்தவரை ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. மேலும் ஏர்டெல் போன்று வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்குகிறது ஜியோ நிறுவனம். அதன்பின் 20ஜிபி 4ஜி டேட்டா 56 நாட்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது.

ஏர்டெல் vs ஜியோ: ரூ.399 திட்டம்
ஏர்டெல் ரூ.399 ரீசார்ஜ் திட்டம் பொதுவாக வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை ப்ரீபெய்ட் பயனர்களுக்கு வழங்குகிறது, மேலும் 84ஜிபி 4ஜி டேட்டா 84 நாட்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது.
ஜியோ ரூ.399 திட்டம் பொதுவாக வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்குகிறது, மேலும் 84ஜிபி 4ஜி டேட்டா 84 நாட்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது, இந்த திட்டத்தில் இரு நிறுவனங்களுக்கும் ஒற்றுமை உள்ளது.

ஏர்டெல் vs ஜியோ: ரூ.149 திட்டம்
ஏர்டெல் ரூ.149 திட்டம் பொறுத்தவரை ஏர்டெல் டூ ஏர்டெல் வரம்பற்ற கால் அழைப்புகளை வழங்குகிறது, மேலும் 2ஜிபி 4ஜி டேட்டா28 நாட்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது.
ஜியோ ரூ.149 திட்டம் பொறுத்தவரை வரம்பற்ற கால் அழைப்புகளை வழங்குகிறது, மேலும் 2ஜிபி 4ஜி டேட்டா28 நாட்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது.

ஏர்டெல் ரூ.8/- ரீசார்ஜ்:
ஏர்டெல் நிறுவனம் ரூ.5 முதல் ரூ.399/- அதன் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ.8/- மதிப்புள்ள ரீசார்ஜ் பேக் ஆனது 56 நாட்களுக்கு ஏர்டெல் உள்ளூர் 10 எஸ்.டி.டி அழைப்புகளை நிமிடத்திற்கு 30 பைசா என்றவொரு விகிதத்தில் மேற்கொள்ள உதவும்.

ரூ.40/- மற்றும் ரூ.60/- ரீசார்ஜ்:
ரூ.40/- மதிப்புள்ள ஏர்டெல் திட்டமானது, ரூ.35/-க்கான வரம்பற்ற பேச்சு நேரத்தை வழங்கும். மறுபக்கம் ரூ.60/- திட்டமானது ரூ.58/-க்கான வரம்பற்ற பேச்சு நேரத்தை வழங்கும்.


Click it and Unblock the Notifications