Home
News

ஏர்டெல், ஜியோ வழங்கும் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்.. OTT.. அன்லிமிடெட் சலுகைகள்.. எது சிறந்தது?

ஜியோ (jio) மற்றும் ஏர்டெல் (airtel) நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்கள் தற்போது பட்ஜெட் விலை திட்டங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. இதில் எந்த நிறுவனம் அதிக சலுகைகள் வழங்குகிறது மற்றும் எதை தேர்வு செய்வது நல்லது என்பதை இந்த பதிவில் சற்று விரவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல், ஜியோ வழங்கும் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்.. OTT.. எது சிறந்தது?

ஜியோ நிறுவனத்தின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 449 prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 28 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் இந்த ஜியோ திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த ஜியோவின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் இந்த ஜியோ ரூ.449 திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். இதுதவிர பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதாவது தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் ஜியோ நிறுவனத்தின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 449 prepaid Plan) தினமும் 4ஜிபி டேட்டா வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும்.இந்த திட்டத்தில் தினசரி 4ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டம் அதிகமான ஓடிடி நன்மைகளை வழங்குகிறது.

அதன்படி ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா வழங்கப்படுகிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே போன்ற 22 ஓடிடி சந்தா கிடைக்கிறது. அதேபோல் 28 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

ஏர்டெல், ஜியோ வழங்கும் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்.. OTT.. எது சிறந்தது?

மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), 30ஜிபி கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.

எது சிறந்தது? ஜியோவின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தை விட ஏர்டெல் ரூ.449 திட்டம் அதிக டேட்டா மற்றும் அதிக ஓடிடி நன்மைகளை வழங்குகிது. எனவே ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel, Jio offer Rs.449 prepaid plan: OTT. Unlimited offers: which is better?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X