Home
News

Jio, Airtel, Vi சிறந்த திட்டங்கள்: கச்சிதமான விலையில் தினமும் 3ஜிபி, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் OTT நன்மை

நீங்கள் Jio, Airtel அல்லது Vi என எந்த பயனராக இருந்தாலும், நிச்சயமாக அதிக டேட்டா நன்மை மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை கிடைக்கும் திட்டங்களை தான் தேர்வு செய்ய நினைப்பீர்கள். அப்படி, உங்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மைகளுடன் சில OTT தளங்களின் நன்மைகளும் இலவசமாகக் கிடைத்தால் வேண்டாம் என்றா சொல்லப்போகிறோம். அப்படியான சிறந்த திட்டங்களைப் பற்றித் தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஜியோ ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டம்

இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. இத்துடன் உங்களுக்கு அன்லிமிடெட் ஆன்-நெட் வாய்ஸ் கால் நன்மை என 28 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையுடன் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஜியோ பயனர்கள் வழக்கம் போல ஜியோ ஆப்ஸிற்கான இலவச சந்தாவையும் பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் மொத்தமாக 84 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ. 398 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ. 398 ப்ரீபெய்ட் திட்டம்

இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. இத்துடன் உங்களுக்கு அன்லிமிடெட் ஆன்-நெட் வாய்ஸ் கால் நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகளாக விங்க் மியூசிக், ஷா அகாடமியின் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தின் சந்தா, இலவச ஹலோ டியூன்ஸ் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ .150 கேஷ்பேக் கிடைக்கும். ஆனால், இதில் OTT நன்மைகள் எதுவும் இல்லை.

Vi Rs. 401 ப்ரீபெய்ட் திட்டம்

Vi Rs. 401 ப்ரீபெய்ட் திட்டம்

இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. ஆலிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை வெறும் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இந்த திட்டத்தில் உங்களுக்குக் கூடுதலாக 16 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இத்துடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் 1 ஆண்டு விஐபி சந்தா, Vi மூவிஸ் மற்றும் டிவிக்கான அணுக்களையும் வழங்குகிறது.

OTT நன்மையுடன் கிடைக்கும் ஜியோ ரூ. 401 ப்ரீபெய்ட் திட்டம்

OTT நன்மையுடன் கிடைக்கும் ஜியோ ரூ. 401 ப்ரீபெய்ட் திட்டம்

இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. ஆலிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை வெறும் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இத்துடன், ஜியோ ஆப்ஸ்களுக்கான சந்தா, டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு 1 ஆண்டு விஐபி சந்தாவை ஜியோ வழங்குகிறது.

கச்சிதமான விலையில் 90ஜிபி டேட்டா

கச்சிதமான விலையில் 90ஜிபி டேட்டா

இந்த திட்டம் பயனர்களுக்கு மொத்தமாக 90 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. முன்னர் பார்த்த திட்டம் 84 ஜிபி டேட்டாவை வழங்கியது. இதில் 6ஜிபி கூடுதல் டேட்டா கிடைப்பதனால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கிறது.

OTT நன்மையுடன் கிடைக்கும் Vi ரூ .405 ப்ரீபெய்ட் திட்டம்

OTT நன்மையுடன் கிடைக்கும் Vi ரூ .405 ப்ரீபெய்ட் திட்டம்

Vi வழங்கும் இந்த திட்டமும் உங்களுக்கு 90 ஜிபி டேட்டாவை 28 வேலிடிட்டி உடன் வழங்குகிறது. அதாவது தினமும் 3 ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 6 ஜிபி டேட்டாவை இத்திட்டம் வழங்குகிறது. இத்துடன் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் ZEE5 பிரீமியமுக்கான 1 வருட சந்தா, Vi மூவிஸ் மற்றும் டிவிக்கான அணுகலையும் வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.588 ப்ரீபெய்ட் திட்டம் (56 நாட்கள் வேலிடிட்டி)

ஏர்டெல் ரூ.588 ப்ரீபெய்ட் திட்டம் (56 நாட்கள் வேலிடிட்டி)

இந்த திட்டம் உங்களுக்குத் தினமும் இதில் 3 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு நன்மை தினமும் 100 எஸ்எம்எஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சேவைக்கான அணுகலையும் ஏர்டெல் வழங்குகிறது. இத்துடன் இலவச ஹெலோட்டூன்ஸ் (hellotunes), Wynk Music சந்தா, FastAg அணுகல் போன்ற பல நன்மைகளை நிறுவனம் வழங்குகிறது.

Vi வழங்கும் ரூ. 601 ப்ரீபெய்ட் திட்டம்

Vi வழங்கும் ரூ. 601 ப்ரீபெய்ட் திட்டம்

Vi நிறுவனம் ரூ. 601 விலையில் தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கும் திட்டத்தை வழங்குகிறது. மேலும், இந்த திட்டம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா, வீக்எண்டு டேட்டா ரோல் ஓவர் மற்றும் இரவு நேர அதிவேக டேட்டா நன்மை, Vi மூவிஸ் மற்றும் டிவிக்கான அணுகலையும் வழங்குகிறது. OTT நன்மை, வீக் எண்டு ரோல் ஓவர் நன்மையுடன் கிடைக்கும் ஒரே திட்டம் Vi நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Vi Rs. 801 ப்ரீபெய்ட் திட்டம்; 16 ஜிபி டேட்டா எக்ஸ்டரா (84 நாள் வேலிடிட்டி)

Vi Rs. 801 ப்ரீபெய்ட் திட்டம்; 16 ஜிபி டேட்டா எக்ஸ்டரா (84 நாள் வேலிடிட்டி)

இந்த திட்டம் பயனர்களுக்குத் தினமும் 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. இத்திட்டத்தின் வழியாக உங்களுக்கு 16 ஜிபி டேட்டா கூடுதலாகக் கிடைக்கிறது. இத்துடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் 1 ஆண்டு விஐபி சந்தா, அதிவேக இரவுநேர டேட்டா, வீக் எண்டு ரோல் ஓவர் டேட்டா நன்மை, Vi மூவிஸ் மற்றும் டிவி போன்ற கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.

ஜியோ ரூ. 999 ப்ரீபெய்ட் திட்டம் (84 நாள் வேலிடிட்டி)

ஜியோ ரூ. 999 ப்ரீபெய்ட் திட்டம் (84 நாள் வேலிடிட்டி)

இந்த திட்டம் பயனர்களுக்குத் தினமும் 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இத்துடன் உங்களுக்கு ஜியோவின் கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது. இந்த திட்டம் ஜியோ ஆப்ஸ்-களுக்கான அணுகலையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Jio and Vi s Best Prepaid Plans Which Offers 3GB Daily Data Unlimited Voice Call and OTT Subscriptions : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X