தினசரி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு- 84 நாட்கள் வேலிடிட்டி: ஏர்டெல், விஐ, ஜியோ பயனர்களே!

|

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன. ஒவ்வொரு நிறுவனங்களும் பல்வேறு விலைப் பிரிவுகளில் பல்வேறு அம்சங்களோடு திட்டங்களை வழங்கி வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் முயற்சியிலும் அதிகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தொலைத்தொடர்பு நிறுவன திட்டங்களின் விலை சமீபத்தில் உயர்த்தி அறிவிக்கப்பட்டன. இதையடுத்து வாடிக்கையாளர்களுக்கு நீண்ட நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டியது கட்டாயமாக இருந்தது. இதையடுத்து ஏர்டெல், விஐ மற்றும் ஜியோ வழங்கும் 84 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களின் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

ஏர்டெல் மற்றும் விஐ திட்டங்கள்

ஏர்டெல் மற்றும் விஐ திட்டங்கள்

ஏர்டெல் மற்றும் விஐ மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை 84 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. அதேபோல் ஜியோ நான்கு திட்டங்களை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. அதேபோல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் சொந்த ஸ்ட்ரீமிங் சேவையை தவிர பிற சிறந்த ஓடிடி நன்மைகளையும் தொகுத்து வழங்குகின்றன. ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.1066 திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்கான ஒரு வருட அணுகலை தொகுத்து வழங்குகின்றன. அதேபோல் ரிலையன்ஸ் ஜியோ தினசரி 3 ஜிபி டேட்டாவை ரூ.1119 என்ற விலையில் வழங்குகிறது.

ப்ரீபெய்ட் திட்டங்களின் விவரங்கள்

ப்ரீபெய்ட் திட்டங்களின் விவரங்கள்

ப்ரீபெய்ட் திட்டங்களின் விவரங்களை பார்க்கும் போது, திட்டங்களில் டேட்டா, குரல் அழைப்பு, ஓடிடி உள்ளடக்கம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. ஏணைய பயனர்களின் விருப்பம் குறைந்த விலையில் நீண்ட காலம் செல்லுபடியாகும் திட்டங்களை தேர்வு செய்வதாகவே இருக்கிறது. ஒவ்வொரு மாதம் ரீசார்ஜ் செய்வதில் இருக்கும் குழப்பம் சிரமத்தை தவிர்க்க 84 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களின் விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆனது 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களை தொகுத்து வழங்குகின்றன. ஏர்டெல் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இந்த விலையானது ரூ.719, ரூ.839 மற்றும் ரூ.455 விலையில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் மொத்தம் 6 ஜிபி என சலுகைகளை வழங்குகின்றன. முதல் இரண்டு திட்டங்களும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகின்றன. அதேபோல் ரூ.455 திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளோடு மொத்தம் 900 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது.

ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் நன்மை

ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் நன்மை

அதேபோல் இந்த திட்டங்களில் அப்பல்லோ 24/7 செயலிக்கான மூன்று மாத அணுகல், ஷா அகாடமியின் இலவச ஆன்லைன் வகுப்பு, ஃபாஸ்ட்டேக் ரூ.100 கேஷ்பேக், இலவச ஹலோ ட்யூன்கள், விங்க் இலவச இசை உள்ளிட்ட மூன்று திட்டங்களும் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் நன்மைகளுடன் வருகின்றன. இந்த திட்டங்கள் அனைத்தும் ஸ்ட்ரீமிங் நன்மைகளின் அடிப்படையில் மொபைல் பதிப்பான அமேசான் பிரைமுக்கான 30 நாள் இலவச சோதனை அணுகலை வழங்குகின்றன.

வோடபோன் ஐடியா (விஐ) நன்மைகள்

வோடபோன் ஐடியா (விஐ) நன்மைகள்

வோடபோன் ஐடியா (விஐ) நிறுவனத்தின் 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள் விவரங்களை பார்க்கும் போது ரூ.459 திட்டத்தின் விலை முதல் தொடங்குகின்றன. அதேபோல் விஐ ரூ.719 மற்றும் ரூ.839 விலையில் திட்டங்களை வழங்குகின்றன. விஐ வழங்கும் ரூ.459 திட்டமானது மொத்தம் 6 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. அதேபோல் மொத்தம் 1000 எஸ்எம்எஸ்கள் உடன் 84 நாட்கள் வேலிடிட்டியோடு வருகிறது. ஏர்டெல்லின் ரூ.719 மற்றும் ரூ.839 திட்டங்களை போன்ற விஐ வழங்கும் ரூ.719 மற்றும் ரூ.839 திட்டங்களில் தினசரி 1.5 ஜிபி மற்றும் தினசரி 2 ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகிறது. அதோடு வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது. ஏர்டெல் உடன் ஒப்பிடும் போது விஐ கூடுதல் பலன்களை வழங்குகிறது என்றே கூறலாம். இந்த திட்டத்தில் 12 AM முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. டேட்டா ரோல் ஓவர் நன்மையையும், சொந்த ஸ்ட்ரீமிங் நன்மைகளையும் தொகுத்து வழங்குகின்றன.

ரிலையன்ஸ் ஜியோ 84 நாட்கள் வேலிடிட்டி திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ 84 நாட்கள் வேலிடிட்டி திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ 84 நாட்கள் வேலிடிட்டியுடன் நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்களின் விலை விவரங்களை பார்க்கையில், அது ரூ.666, ரூ.719, ரூ.1066 மற்றும் ரூ.1119 ஆகும். ஒவ்வொரு திட்டங்களும் வெவ்வேறு டேட்டா வரம்புகளை வழங்குகிறது. ரூ.666 திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகிறது. இதன்மூலம் மொத்தம் 126 ஜிபி டேட்டாவை தொகுத்த வழங்குகிறது. அதேபோல் இதில் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தின் ரூ.719 விலையில் தினசரி 2 ஜிபி டேட்டா என மொத்தம் 168 ஜிபி டேட்டாவையும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டங்களில் ஜியோவின் சொந்த பயன்பாடுகளான ஜியோடிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் போன்ற கூடுதல் நன்மைகளை வழங்குகின்றன.

ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ப்ரீபெய்ட் திட்டமான ரூ.1066 விலை கிடைக்கக்கூடிய நன்மைகளை பார்க்கையில், இது ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளை தொகுத்து வழங்குகிறது. ஜியோவின் சொந்த ஸ்ட்ரீமிங் சேவையை தவிர ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு வருடத்திற்கான இலவச டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை தொகுத்து வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் கூடுதல் 5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 173 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Airtel, Jio and VI Offers 84 Days Validity Plan with Daily Data limit, unlimited Voice Call and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X