Jio, Airtel, Vi: பயனர்களுக்கான பெஸ்ட் ஹெவி டேட்டா திட்டங்கள்.. தினமும் 3ஜிபி டேட்டா.. அட்டகாச கூடுதல் நன்மை..

|

ப்ரீபெய்ட் திட்டங்களில் ஹெவி டேட்டா நன்மையுடன் ஒரு சிறந்த திட்டத்தை தேடும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது. தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்கள் உங்கள் தினசரி தேவையை பூர்த்தி செய்ய பயனுள்ளதாய் அமையும். இந்த பதிவில் நாம் பார்க்க போகும் திட்டங்கள் எல்லாம் உயர்நிலை ப்ரீபெய்ட் பேக்குகள் ஆகும். பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் தினசரி 3ஜிபி டேட்டா கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை அதன் பயனர்களுக்காகக வழங்குகிறது. இதில் சிறந்த திட்டம் எது என்று பார்க்கலாம்.

ஏர்டெல் வழங்கும் ஹெவி டேட்டா திட்டங்கள்

ஏர்டெல் வழங்கும் ஹெவி டேட்டா திட்டங்கள்

ஹெவி டேட்டா திட்டங்களுக்கு வரும்போது, ​​தொலைத்தொடர்பு நிறுவனம் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்களை மட்டுமே வழங்குகிறது. இதில் எதுவுமே நீண்ட காலத் திட்டம் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. தொலைத்தொடர்பு நிறுவனம் 28 நாட்களுக்குத் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ. 599 விலையிலிருந்து வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும் தினசரி 3ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது.

ரூ. 699 விலையில் 56 நாட்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா

ரூ. 699 விலையில் 56 நாட்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா

இத்துடன் கூடுதல் நன்மைகளாக, இந்த திட்டத்தின் பயனர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் OTT இயங்குதளத்திற்கான வருடாந்திர சந்தாவுடன் வழங்குகிறது. இதேபோல், 56 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 3ஜிபி டேட்டாவை வழங்கும் மற்றொரு திட்டத்தை நிறுவனம் வெறும் ரூ. 699 விலையில் வழங்குகிறது. இந்த திட்டம் தினமும் 3ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்கும் செல்லுபடியாகும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இத்துடன் அமேசான் பிரைம் சந்தா உடன் இன்னும் பல கூடுதல் நன்மைகள் கிடைக்கிறது.

90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..

ஜியோ வழங்கும் ஹெவி டேட்டா திட்டங்கள்

ஜியோ வழங்கும் ஹெவி டேட்டா திட்டங்கள்

ஜியோ ரூ. 419 முதல் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்களை வழங்குகிறது. ஜியோவின் ரூ.419 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. செல்லுபடியாகும் காலத்திற்குத் தினசரி 3ஜிபி டேட்டாவை இத்திட்டம் வழங்குகிறது.

ரூ. 601 விலையில் OTT நன்மையோடு தினமும் 3ஜிபி டேட்டா நன்மை

ரூ. 601 விலையில் OTT நன்மையோடு தினமும் 3ஜிபி டேட்டா நன்மை

ஜியோவின் மற்றொரு 3ஜிபி டேட்டா கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றிப் பார்க்கையில், இது 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் ரூ. 601 விலையில் வருகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை நிறுவனம் வழங்குகிறது. இது தினசரி 3ஜிபி டேட்டாவுடன், பயனர்கள் கூடுதலாக 6ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டம் Disney+ Hotstar Mobile OTT இயங்குதளத்திற்கான வருடாந்திர சந்தாவுக்கான அணுகலுடன் வருகிறது.

LPG சிலிண்டரில் உள்ள எண்ணின் அர்த்தம் என்ன தெரியுமா? இது உங்கள் பாதுகாப்பிற்கானதா? இனி கூர்ந்து கவனியுங்கள்..LPG சிலிண்டரில் உள்ள எண்ணின் அர்த்தம் என்ன தெரியுமா? இது உங்கள் பாதுகாப்பிற்கானதா? இனி கூர்ந்து கவனியுங்கள்..

84 நாட்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டத்தின் விலை இது தான்

84 நாட்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டத்தின் விலை இது தான்

பட்டியலில் அடுத்ததாக இருப்பது ரூ.1,199 விலையில் வரும் ப்ரீபெய்ட் திட்டம். இது 84 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்குத் தினமும் 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இத்திட்டம் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 SMS நன்மைகளுக்கான அணுகலை வழங்குகிறது. இதேபோல், ஜியோ நிறுவனம் தினமும் 3 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் ஒரு வருட திட்டத்தையும் தன் வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதன் விலை ரூ.4,000திற்கு மேல் செல்கிறது.

Vi வழங்கும் ஹெவி டேட்டா திட்டங்கள்

Vi வழங்கும் ஹெவி டேட்டா திட்டங்கள்

தினமும் 3ஜிபி இணையத்தை வழங்கும் பல ப்ரீபெய்ட் திட்டங்களையும் விஐ கொண்டுள்ளது. இதில் அடிப்படை 3ஜிபி பேக் ரூ.475 விலையில் வருகிறது. இது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களுடன் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் காலத்திற்குத் தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பட்டியலில் உள்ள அடுத்த திட்டம் ரூ.699 விலையில் கிடைக்கிறது. இது ஏர்டெல் வழங்கும் திட்டத்தைப் போன்ற பலன்களைக் கொண்டுள்ளது.

கிஸ்பாட் கிவ் அவே போட்டி-நீங்கள் லைக் மற்றும் ஷேர் செய்தால் போதும்- இலவசமாக நோக்கியா சி01 பிளஸ் வெல்ல வாய்ப்புகிஸ்பாட் கிவ் அவே போட்டி-நீங்கள் லைக் மற்றும் ஷேர் செய்தால் போதும்- இலவசமாக நோக்கியா சி01 பிளஸ் வெல்ல வாய்ப்பு

56 நாட்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா வழங்கும் திட்டம்

56 நாட்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா வழங்கும் திட்டம்

ரூ.699 விலை திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்திற்கு தினமும் 3ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. கடைசியாக, டெல்கோ டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகலுடன் வரும் இரண்டு திட்டங்களை வழங்குகிறது. Vi ஆனது 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கு ரூ. 601 விலையில் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 SMS நன்மைகளை வழங்குகிறது.

16ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கிறதா?

16ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கிறதா?

இதில் கிடைக்கும் தினசரி 3ஜிபி டேட்டாவுடன், பயனர்கள் மொத்தம் 16ஜிபி டேட்டாவையும் பெறுகிறார்கள். மறுபுறம், தொலைத்தொடர்பு நிறுவனம் ஒரு நாளைக்கு 3ஜிபி ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ.901 விலையில் வழங்குகிறது. இந்த திட்டம் 70 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. இத்திட்டம் தினமும் 100 எஸ்எம்எஸ்களுடன் உண்மையான வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. தினசரி கிடைக்கும் நார்மல் டேட்டா நன்மையை வைத்து நாட்களை நகர்ந்த முடியாது என்று நினைப்பவர்கள் இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை கருத்தில் கொண்டு ரீசார்ஜ் செய்து பயன்பெறலாம்.

ஏசியால் கரண்ட் பில் எகிறுகிறதா? இது தெரிஞ்சா கரண்ட் பில்லை நீங்க குறைக்கலாம்.. AC பற்றிய சூப்பர் டிப்ஸ்கள்..ஏசியால் கரண்ட் பில் எகிறுகிறதா? இது தெரிஞ்சா கரண்ட் பில்லை நீங்க குறைக்கலாம்.. AC பற்றிய சூப்பர் டிப்ஸ்கள்..

Best Mobiles in India

English summary
Airtel Jio and Vi Offer These 3GB Daily Data Prepaid Plans Fitting For Intensive Data Users : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X