ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா: தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் அருமையான சலுகைகளை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த மூன்று நிறுவனங்களும் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் ஏர்டெல், ஜியோ,வோடபோன் ஐடியா நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் திட்டங்களை வைத்துள்ளன. குறிப்பாக இந்த திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இப்போது அந்த திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் OTT இயங்குதளத்திற்கான வருடாந்திர சந்தா உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் பிரைம் மெம்பர்ஷிப்பும் 56 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதேபோல் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் Airtel Thanks நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.419 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.419 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக ஜியோ ரூ.419 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
இத்துடன் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றையும் இந்த திட்டத்தில் அனுபவிக்க முடியும்.

ஜியோவின் ரூ. 601 விலை கொண்ட திட்டம்
அடுத்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டமானது ரூ. 601 விலையில் கிடைக்கும் திட்டமாகும். இது பயனர்களுக்கு 3ஜிபி தினசரி டேட்டா மற்றும் கூடுதலாக 6ஜிபி டேட்டா (மொத்த டேட்டா வரம்பு 90ஜிபி), அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்களாகும். இதுதவிர பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

வோடபோன் ஐடியா ரூ.475 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.475 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். அதேபோல் வோடபோன் ஐடியா ரூ.475 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.இதுதவிர பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

வோடபோன் ஐடியா ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் டேட்டா ரோல்ஓவர், Binge All Night, Vi Movies மற்றும் TVக்கான அணுகல், கூடுதலாக 2ஜிபி டேட்டா உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications