Home
News

ரூ.199- ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகையை வழங்கிய ஏர்டெல்.!

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் தொடர்ந்து அசத்தலான சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி ஜனவரி 2021 முதல் இண்டர்கனெக்ட் பயன்பாட்டுக் கட்டணங்களை நீக்குவதாக அறிவித்தபோது, ஜியோ நிறுவனம் தாங்கள் டெலிகாம் துறையின் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டுள்ளதாக கூறி ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களுடன் ஒப்பிட்டது.

ஏர்டெல் நிறுவனம் ரூ.199

இந்த நிலையில், ஏர்டெல் நிறுவனம் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. குறிப்பாகஇந்த திட்டதில் முன்பு 1ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது, தற்சமயம் 1.5ஜிபி டேட்டாவை வழங்குவதாக தெரிவித்துள்ளது ஏர்டெல். மேலும் ஏர்டெல் ரூ.199 திட்டம் ஆனது 24 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்குமட்டுமே இந்த நன்மை பொருந்தும் என்பதையும் நினைவில் கொள்க.

அணுக கிடைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் ஆகியவற்றில் இந்த சலுகை கிடைப்பதாக டெலிகாம் டால்க் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. பின்பு இது தற்போது வரை ஆந்திரா மற்றும் தெலுங்கானா, கர்நாடாக வட்டத்தில் மட்டுமே அணுக கிடைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 எர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திருத்தப்பட்டுள்ளது.

ஆனால் நாம் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே எர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திருத்தப்பட்டுள்ளது. தெரியாதவர்களுக்கு, ஏர்டெல்-இன் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் தற்போது நாடு முழுவதும் 24 நாட்களுக்கு ஒரு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

ஜியோவின் ரூ.199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்

தற்சமயம் இது ஜியோவின் ரூ.199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்துடன் போட்டியிடுகிறது. ஜியோவின் ரூ.199 திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, பின்பு இந்த திட்டதின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தை

அதன்படி ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தை ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டாவை வழங்கும்படி திருத்தி உள்ளதால், இதன் மொத்த டேட்டா அளவு மட்டுமே 42 ஜிபி ஆக மாறி உள்ளது. மற்றபடி இந்தியாவிற்குள் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ்கள், இலவச ஹலோ ட்யூன்கள், விங்க் மியூசிக் சந்தா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

நிறுவனம் ரூ.219 மதிப்புள்ள பேக்

அதேபோல் ஏர்டெல் ரூ.199 மற்றும் ரூ.249 திட்டங்களுக்கு இடையில், ஏர்டெல் நிறுவனம் ரூ.219 மதிப்புள்ள பேக் ஒன்றையும் வைத்திருக்கிறது. இந்த ரூ.219 திட்டம் தினசரி 1ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நன்மைகளுடன் 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel is offering an additional offer of Rs.199 prepaid plan: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X