அறிமுகம்: 1ஜிபி டேட்டா செலவையே மாற்றியமைக்கும் ஏர்டெல் ரூ.157/- திட்டம்.!
மேலும் இது உத்தியோகபூர்வ மேம்படுத்தல் இல்லை என்றாலும் கூட மைஏர்டெல் பயன்பாட்டில் 'உங்களுக்கான சிறப்பு சலுகைகள்' பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்திய தொலைத் தொடர்பு இயக்குநர்கள் அனைவருமே முழு மூச்சில், தத்தம் பயனர்களை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் உள்ளன. அதற்கு சாத்தியமான ஒரே வழி - முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிற்கு கடும்போட்டி விளைவிக்கும் ரீசார்க் திட்டங்களை தொகுத்து வழங்குவதே ஆகும்.

இதன் விளைவாக ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கட்டண திட்டத்தையோ அல்லது பழைய திட்டங்களில் உள்ள நன்மைகளை நீடிக்கும் நோக்கத்தில் சில கட்டண திருத்தத்தையோ நிகழ்த்த வேண்டியதாக உள்ளது குறிப்பாக பார்தி ஏர்டெல் நிறுவனம் ஜியோ போன்றே காம்போ திட்டங்களை (டேட்டா + வாய்ஸ்) வழங்கி வருகிறது.

அதென்ன திட்டம்.? அதன் நன்மைகள் என்ன.?
இந்த முன்னணி தொலைத் தொடர்பு ஆபரேட்டர் தற்போது அறிவித்துள்ள புதிய கட்டணத் திட்டமொன்று, நிறுவனத்தி 1ஜிபி டேட்டா செலவு வரம்பையே மாற்றி அமைக்கும்படி உள்ளது. அதென்ன திட்டம்.? அதன் நன்மைகள் என்ன.? அதன் 1ஜிபி டேட்டாவிற்கான செலவு தான் என்ன.?

நன்மை
ஏர்டெல் அறிவித்துள்ள புதிய திட்டமானது ரூ.157/- என்ற விலை நிர்ணயத்தை கொண்டுள்ளது. இந்த திட்டம் மொத்தம் 27 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதன் நன்மைகளை பொறுத்தமட்டில், ரூ.52.3/-க்கு 1ஜிபி என்கிற விலையில் மொத்தம் 3ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

சிறந்த திட்டம்
ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் சமீபத்திய திட்டங்களிலேயே இதுவொரு சிறந்த திட்டம் என்பதில் ஐயமில்லை. இருப்பினும், இது தரவு நன்மைகளை மட்டுமே வழங்குகிறது மற்றும் எந்தவிதமான குரல் அழைப்பு நன்மைகளையும் வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இது உத்தியோகபூர்வ மேம்படுத்தல் இல்லை
மேலும் இந்த திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. உடன் இந்த திட்டம் - ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி போன்ற பல வட்டாரங்களில் - மைஏர்டெல் பயன்பாட்டில் இடம்பெற்றுள்ளதென்று டெலிகாம்டால்க் வலைத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இது உத்தியோகபூர்வ மேம்படுத்தல் இல்லை என்றாலும் கூட மைஏர்டெல் பயன்பாட்டில் 'உங்களுக்கான சிறப்பு சலுகைகள்' பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.

பரிந்துரை
அதிகாரபூர்வமான ஏர்டெல் ரூ.157/- என்கிற கட்டணத் திட்டமானது ஐந்து நாட்களுக்கு செல்லுபடியாகும் 2ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி தரவை வழங்குவதால், இந்த வாய்ப்பு கிடைக்கப்பெறும் பயனர்கள் ரீசார்ஜ் செய்யும் நன்மைகளை ஒருமுறை சரிபார்த்துகொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

ரூ.49/- திட்டம்
கூடுதலாக, மற்றொரு திறந்த சந்தை திட்டத்தையும் ஏர்டெல் வழங்குகிறது. ரூ.49/-க்கு கிடைக்கும் அந்த திட்டமானது 1ஜிபி அளவிலான 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்குகிறது. ஆனால் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் - ஒரு நாள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்திலிருந்து சில நல்ல திட்டங்களும் கிடைக்கின்றன.

ரூ.349/- திட்டம்
அதில் ரூ.349/- திட்டம் குறிப்பிடத்தக்கது. இந்த வரம்பற்ற காம்போ திட்டமானது நாள் ஒன்றிற்கு 1.5கஜினி அளவிலான டேட்டாவுடன், வெளிச்செல்லும் அழைப்புகள் உள்பட வரம்பற்ற குரல் அழைப்புகள், நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை மொத்தம் 28 செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications