யாருக்கும் கொடுக்காத நன்மையை கொடுத்து Airtel அசத்தல்! வோடபோனுக்கு மூடுவிழாவா?

|

வோடபோன் ஐடியா நிறுவனம் மூடப்படலாம் என்று பல தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனாலும் இன்னும் உறுதியான தகவல்கள் ஏதுவும் வேலியிடப்படாததால் இதை முழுமையாக நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. அப்படி வோடபோன் ஐடியா மூடப்பட்டால், அதன் வாடிக்கையாளர்களை ஏர்டெல் நிறுவனம் கவர்ந்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

சிறந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள்

சிறந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள்

மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போல் இல்லாமல், ப்ரீபெய்ட் பிரிவின் கீழ் பலதரப்பட்ட புதிய சலுகைகள் மற்றும் நன்மைகளை பாரதி ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் தனது பயனர்களுக்கு வழங்காத உண்மையான வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையை ஏர்டெல் தனது மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் வழங்கி வருகிறது.

அப்படியென்ன சிறந்த நன்மை இருக்கிறது?

அப்படியென்ன சிறந்த நன்மை இருக்கிறது?

இந்த மூன்று திட்டங்களை வைத்து தான் ஏர்டெல் நிறுவனம், அதன் பயனர்களை தன் வசம் தக்க வைத்துள்ளது என்று கூறலாம். அப்படியென்ன சிறந்த திட்டங்களை ஏர்டெல் தன் வசம் வைத்துள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள். இந்த திட்டங்ளின் கீழ் கிடைக்கும் நண்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கான சிறந்த திட்டமாக இந்த 3 திட்டங்கள் இருக்கிறதா என்று செக் செய்யுங்கள்.

Jio பயனர்களுக்கு கிடைத்த 4 புதிய டேட்டா வவுச்சர்கள் - வேலிடிட்டியில் ஏராள தாராளம்!Jio பயனர்களுக்கு கிடைத்த 4 புதிய டேட்டா வவுச்சர்கள் - வேலிடிட்டியில் ஏராள தாராளம்!

கொடுக்காத சலுகையை கொடுத்து அசத்தும் ஏர்டெல்

கொடுக்காத சலுகையை கொடுத்து அசத்தும் ஏர்டெல்

ஏர்டெல்லின் கீழ் கிடைக்கும் ரூ.179, ரூ.279 மற்றும் ரூ.349 ஆகிய திட்டங்களை வைத்து தான் பல பயனர்களை ஏர்டெல் தன் வசம் தக்க வைத்துக்கொண்டது, ஏனென்றால், ஏர்டெல் நிறுவனம் வழங்கும் இந்த முதல் இரண்டு திட்டங்கள் ஆயுள் காப்பீட்டு சலுகையுடன் வருகின்றது. அதே நேரத்தில் மூன்றாவது திட்டமான ரூ.349 திட்டம் அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் உடன் வருகிறது. எந்த நிறுவனமும் கொடுக்காத சலுகையை கொடுத்து ஏர்டெல் அசதியுள்ளது.

ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம்

இந்த ரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மை, FUP வரம்பு இல்லாமல் வரம்பற்ற அழைப்பு, தினமும் 300 எஸ்எம்எஸ்கள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான பாரதி ஏஎக்ஸ்ஏ லைப் (Bharti AXA Life) ஆயுள் காப்பீடு போன்ற நன்மைகளுடன் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த திட்டம் அணுக கிடைக்கிறது.

போதும் போதும்னு சொல்ல வைக்கும் சாம்சங்: ஆஃபர்கள் அள்ளி குவிக்கும் Samsung S20போதும் போதும்னு சொல்ல வைக்கும் சாம்சங்: ஆஃபர்கள் அள்ளி குவிக்கும் Samsung S20

ரூ.279 திட்டத்திற்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான நன்மை

ரூ.279 திட்டத்திற்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான நன்மை

ரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தைப் போலவே, ரூ.279 திட்டத்திலும் பயனர்களுக்கு அதே சலுகைகள் கிடைக்கிறது. ஆனால், ஆயுள் காப்பீட்டு சலுகை மட்டும் கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்த ரூ.279 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மை, FUP வரம்பு இல்லாமல் வரம்பற்ற அழைப்பு சேவை, தினமும் 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ரூ.4 லட்சம் மதிப்பிலான எச்.டி.எஃப்.சி லைஃப் வழங்கும் ஆயுள் காப்பீடு போன்ற நன்மைகளுடன் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

அமேசான் ப்ரைம் சந்தா

அமேசான் ப்ரைம் சந்தா

இறுதியாக ஏர்டெல்லின் இந்த ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மை, FUP வரம்பு இல்லாமல் வரம்பற்ற அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ரூ.129 மதிப்புள்ள ஒரு மாத கால அமேசான் ப்ரைம் சந்தா போன்ற நன்மைகளுடன் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த திட்டம் அனைத்து ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது.

NASA பதிவு செய்த ஸ்பேஸ் ஸ்டேஷன் லைவ் வீடியோவில் UFO! உண்மையில் இது ஏலியன் விமானமா?NASA பதிவு செய்த ஸ்பேஸ் ஸ்டேஷன் லைவ் வீடியோவில் UFO! உண்மையில் இது ஏலியன் விமானமா?

பல கூடுதல் நன்மைகளுடன் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டம் இதுதான்

பல கூடுதல் நன்மைகளுடன் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டம் இதுதான்

ஏர்டெல்லின் ரூ.279 மற்றும் ரூ.349 திட்டங்களுடன் உங்களுக்கு இலவச ஹெலோட்டூன்ஸ், விங்க் மியூசிக் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம் மெம்பர்ஷிப், ஷா- அகாடமியில் நான்கு வார இலவச கோர்ஸ், ஃபாஸ்டேக் சேவைக்கான ரூ.150 கேஷ்பேக் மற்றும் நீங்கள் பயனப்டுத்தும் ஸ்மார்ட்போனுக்கான ஆன்டி வைரஸ் சந்தா போன்ற பல கூடுதல் நன்மைகளுடன் இந்த திட்டம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடாபோன் ஐடியா மூடப்பட்டால் என்ன நடக்கும்?

வோடாபோன் ஐடியா மூடப்பட்டால் என்ன நடக்கும்?

இந்தியாவின் எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும், ஏர்டெல் நிறுவனம் போன்று தனது பயனர்களுக்கு அமேசான் பிரைம் சந்தாவை வழங்கவில்லை. அதேபோல் வோடபோன் ஐடியா மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் வரம்பற்ற குரல் அழைப்பு சேவையை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை வோடாபோன் ஐடியா மூடப்பட்டால், அந்த பயனர்கள் அனைவரும் ஏர்டெல்லிற்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Airtel Is Giving Extra Additional Benefits With It's Prepaid Plans : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X