Home
News

கேபிள் TV-ஐ முடிச்சு விட்ட IPTV.. 356 லைவ் டிவி.. 26 ஓடிடி சந்தா.. 30 நாட்கள் இலவசம்.. ஏர்டெல் ஒரே போட்ட போடு!

கேபிள் டிவி இல்லாமல், டிடிஎச் இல்லாமல் லைவ் டிவி சேனல்களை பார்க்கும்படி ஏர்டெல் (Airtel) நிறுவனம் ஐபிடிவி திட்டங்களை (IPTV Plan) கொண்டுவந்துள்ளது. 350 லைவ் டிவி சேனல்கள், 26 ஓடிடி ஆப்கள் போன்ற சலுகையை ஒரு மாதத்துக்கு இலவசமாகவும் கொடுத்து ஒட்டுமொத்த கஸ்டமர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த ஏர்டெல் ஐபிடிவி திட்டங்களை பெறுவது எப்படி? அந்த திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த ஏர்டெல் ஐபிடிவி சேவை கிடைக்கிறது. அதாவது, ஏர்டெல் பிளாக் திட்டங்கள் கிடைத்த நகரங்களில் இந்த ஐபிடிவி சலுகையும் கிடைக்கிறது. ஆகவே, ஏற்கனவே பிளாக் திட்டங்களை பெறும் கஸ்டமர்களுக்கு அதே ரீசார்ஜ் மூலம் இந்த ஐபிடிவி சலுகையை பெற்று கொள்ளலாம்.

கேபிள் TV-ஐ முடிச்சு விட்ட IPTV.. 356 லைவ் டிவி.. 26 ஓடிடி சந்தா!

புதிய கஸ்டமர்கள் இந்த ஐபிடிவி சேவையை பெற விரும்பினால், ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் (Airtel Thanks App) மற்றும் அருகில் இருக்கும் ஏர்டெல் ஸ்டோர்களுக்கு (Airtel Store) சென்று பெற்று கொள்ளலாம். இதில் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 30 நாட்களுக்கு இலவச சேவை (30 Days Free Service) கொடுக்கப்படுகிறது.

ஏற்கனவே, பிளாக் திட்டங்களை வைத்திருக்கும் கஸ்டமர்களும் ஐபிடிவி திட்டங்களுக்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தை புதிதாக பெறும் கஸ்டமர்களுக்கு கூடுதலாக செலவாகும். அதாவது, ஆரம்ப விலை திட்டம் ரூ.699 மட்டுமேதான் என்றாலும், இன்ஸ்டாலேஷன், வை-பை ரூட்டர், ஐபிடிவி செட்-டாப் பாக்ஸ் போன்றவை வாங்க வேண்டி இருக்கும்.

ஆகவே, முதல் முறை இதற்கும் சேர்த்து கட்டணங்கள் இருக்கும். ஒருவேளை 6 மாதங்கள், 12 மாதங்கள் என்று திட்டத்தை பெற்றால், இன்ஸ்டாலேஷன், ரூட்டர், செட்-டாப் பாக்ஸ் ஆகியவற்றில் சலுகைகைகள் கிடைக்கும். ஒரு முறை பெற்றுவிட்ட பிறகு அடுத்த முறை திட்டத்துக்கு எவ்வளவு தொகையோ அதை மட்டுமே செலுத்தினால் போதுமானதாகும். இப்போது திட்டத்தை பார்ப்போம்.

இந்த ஏர்டெல் ஐபிடிவி திட்டங்களானது ரூ.699 முதல் ரூ.3999 விலை வரையில் கிடைக்கின்றன. இதில் ஃபைபர் டேட்டாவின் வேகம் மற்றும் பிரீமியம் ஓடிடி ஆப்களின் சாந்தா ஆகியவற்றின் அடிப்படையில் சலுகைகள் மாறுபடுகின்றன. இதில் ஆரம்ப விலைக்கு கிடைக்கும் ஏர்டெல் ரூ 699 ஐபிடிவி திட்டத்தை (Airtel Rs 699 IPTV Plan) பற்றி தெரிந்து கொள்வோம். இதில் என்னென்ன சலுகைகள் இருக்கிறது.

இந்த ஐபிடிவி திட்டமானது ஃபைபர் டேட்டா (Fiber Data) மற்றும் லேண்ட்லைன் (Landline) சலுகைகள் கிடைக்கிறது. இதுபோக ஓடிடி ஆப்கள் (OTT Apps) மற்றும் லைவ் டிவி சேனல்களின் (Live TV Channels) சந்தாவும் கிடைக்கிறது. டேட்டாவை பார்க்கையில், 40 எம்பிபிஎஸ் வேகத்தில் கொடுக்கப்படுகிறது. இதை கொடுப்பதற்கு வை-பை ரூட்டர் கிடைக்கும்.

அதேபோல ஓடிடி மற்றும் டிவி சேனல்களுக்கு ஐபிடிவி பாக்ஸ் கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல். ஃபைபர் சேவையை லேண்ட்லைன் வாய்ஸ் கால்களுக்கும் பயன்படுத்தலாம். ஆனால், அதற்கான வாய்ஸ் கால் டிவைஸ்களை கஸ்டமர்கள் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், வை-பை கால்களை செய்து கொள்ளலாம். ரூ.350 மற்றும் ரூ.250 மதிப்பிலான ஐபிடிவி சேனல்கள் வருகிறது.

இதில் கஸ்டமர்கள் ஆப்ஷன்களை எடுத்து கொள்ளலாம். ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Plan) சந்தாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. ஆகவே, எக்ஸ்ட்ரீம் பிளே மூலம் கூடுதலாக 20-க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்களை பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகளுடன் ஆரம்ப விலை திட்டம் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel IPTV Plan With Rs 350 Worth TV Channels 40Mbps Data Unlimited Voice One Month Free Trial
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X