வாரி வழங்கிய ஏர்டெல்.. IPL 2024.. ரூ.39 போதும்.. 20ஜிபி டேட்டா.. புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்.!
ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஏர்டெல். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபேய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். ஏர்டெல் நிறுவனம் தற்போது இரண்டு புதிய திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. அதாவது ஏர்டெல் நிறுவனம் இப்போது ஐபிஎல் போனன்சா டேட்டா பேக்குகளை (Airtel IPL Bonanza Data Packs) தான் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரூ.39 மற்றும் ரூ.79 பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக ஏர்டெல் கிரிக்கெட் ரசிகர்கள் போட்டிகளை ஸ்ட்ரீமிங் செய்யும் போது டேட்டா தீர்ந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்ய இந்த இரண்டு புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஏர்டெல் ரூ.39 டேட்டா பேக் ஆனது ஒரு நாள் மட்டுமே வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒரு நாளுக்கு 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த 20 ஜிபிக்கு மேலும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்த முடியும். அதாவது ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) அடிப்படையில், 20 ஜிபிக்கு மேல் பயன்படுத்தும் டேட்டாவுக்கு 64 கேபிபிஎஸ் வேகம் மட்டுமே வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்படும்.

ஏர்டெல் ரூ.49 டேட்டா பேக் ஆனது 30 நாட்களுக்கு விங்க் பிரீமியம் சந்தாவை (Wynk Premium subscription)வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டமும் ஒரு நாள் மட்டுமே வேலிடிட்டி வழங்குகிறது. ஆனால் 20ஜிபி டேட்டா வழங்குகிறது ஏர்டெல் ரூ.49 டேட்டா பேக். குறிப்பாக இந்த 20 ஜிபிக்கு மேலும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்த முடியும். அதாவது ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) அடிப்படையில், 20 ஜிபிக்கு மேல் பயன்படுத்தும் டேட்டாவுக்கு 64 கேபிபிஎஸ் வேகம் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும்.
ஏர்டெல் ரூ.79 டேட்டா பேக் ஆனது 2 நாள் மட்டுமே வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக ஒரு நாளுக்கு 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 40ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். மேலும் ஓடிடி நன்மைகளை வழங்கும் இரண்டு ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.869 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 869 plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். மேலும் இந்த திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது. வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் RewardsMini சந்தா, அப்பல்லோ 24/7 சர்க்கிள், இலவச ஹெலோட்யூன்ஸ், விங்க் மியூசிக், அன்லிமிடெட் 5ஜி டேட்டா உள்ளிட்ட பல நன்மைகள் இதில் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் (airtel rs 1499 plan) தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், நெட்பிளிக்ஸ் சந்தா, ப்ரீ ஹாலோடியூன்ஸ் இவிங்க் மியூசிக் ( (Wynk Music) சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் அப்பல்லோ 24/7 சர்கிள் போன்ற சலுகைகள் கூட இந்த ஏர்டெல் ரூ.1499 திட்டம் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








