அம்பானியின் மூளையை மிஞ்சிய மிட்டல்: ரூ.193/-க்கு ஏர்டெல் ஆட்-ஆன் அறிமுகம்.!
ஏர்டெல் நிறுவனத்தின் ஆட்-ஆன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதென்ன ஆட்-ஆன்.? இதன் நன்மைகள் என்ன.? இதெப்படி ஜியோவை எதிர்க்கும் என்பதை விரிவாக காணலாம்.
முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிரான மிக சிறந்த போட்டியை முன்னெடுத்துள்ளது. அதாவது நிகழும் கட்டண யுத்தத்தில் புதியதொரு பாணியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு புதிய கட்டணத் திட்டத்தை அறிமுகம் செய்வதென்பது ஒரு பாணியாக இருக்க, மறுபக்கம் ஏற்கனவேஇருக்கும் திட்டத்தின் நன்மைகளை அல்லது செல்லுபடி காலத்தை நீடிப்பது மற்றொரு பாணியாக இருந்தது. தற்போது மூன்றாவதாக ஒரு பாணியை ஏர்டெல் நிறுவனம் தொடங்கி வைத்துள்ளது.

ஆட்-ஆன் திட்டம் அறிமுகம்
அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் ஆட்-ஆன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதென்ன ஆட்-ஆன்.? இதன் நன்மைகள் என்ன.? இதெப்படி ஜியோவை எதிர்க்கும் என்பதை விரிவாக காணலாம்.

ஏர்டெல் ப்ரீபெய்ட் ப்ராமிஸ் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெயிட் சந்தாதாரர்களுக்கு மேலும் அதிக தரவு நன்மையை சேர்க்க இந்த ஆட்-ஆன் திட்டம் உதவும். அதாவது ஒவ்வொரு ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளருக்கும் இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் ப்ராமிஸ் திட்டத்தின் கீழ் வரம்பற்ற காம்போ திட்டங்களுடன் இந்த ஆட்-ஆன் ரீசார்ஜை நிகழ்த்தலாம்.

ரூ.193/- என்கிற ப்ரீபெய்ட் டேட்டா ஆட்-ஆன்
குழப்பமாக இருக்கிறது என்றால் பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.193/- என்கிற ப்ரீபெய்ட் டேட்டா ஆட்-ஆன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது மற்றும் அது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குமென்று வைத்துக்கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டுக்கு
நீங்கள் ஒரு ஏர்டெல் வரம்பற்ற காம்போ திட்டத்தை ரீசார்ஜ் செய்துள்ளீர்கள் மற்றும் அந்த பேக் வழியாக கிடைக்கும் தரவு சலுகையானது திருப்தியாக இல்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள். அதே திட்டத்துடன் இணைந்து கூடுதலாக டேட்டா தேவை என்றால் ஆட்-ஆன் திட்டம் உங்களுக்கு கைகொடுக்கும்.

வரம்பற்ற காம்போ
எடுத்துக்காட்டுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவு, வரம்பற்ற குரல் அழைப்புகள், மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகிய நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஏர்டெல் ரூ.349/- என்கிற வரம்பற்ற காம்போ திட்டத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

நாள் ஒன்றுக்கு 3ஜிபி
இப்போது புதிதாக அறிமுகமாகியுள்ள ரூ.193/- திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்தால் கூடுதல் டேட்டாவை பெறலாம். அதாவது உங்களின் தினசரித் தரவு வரம்பானது நாள் ஒன்றுக்கு 3ஜிபி ஆக உயர்த்தப்படும் மற்றும் இதன் சிறந்த பகுதியாக உங்களின் பிரதான ரீசார்ஜ் செல்லுபடியாகும் காலத்துடன் இந்த ஆட்-ஆன் நன்மை ஒற்றுப்போகும்.

பிரதான திட்டத்தின் செல்லுபடியுடன் ஒற்றுப்போகும்
உதாரணத்திற்கு, ரூ.349/- திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றால் இந்த ரூ.193/- என்கிற ஆட்-ஆன் திட்டமும் அதே 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் பல ஏர்டெல் அப்டேட்ஸ்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications