ஏர்டெல் நிறுவனத்தின் Safe Pay அறிமுகம்: பணம் அனுப்ப சரியான வழி.!

|

ஏர்டெல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய வசதியும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் தான் இருக்கிறது. தற்சமயம் இந்நிறுவனம் Airtel Safe Pay என்கிற முறையை அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஆன்லைன் மோசடிகளிலிருந்து தனது பயனர்களை பாதுகாக்க Airtel Safe Pay வசதியை அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.

சொல்ல வேண்டும் என்றால், இது ஒரு

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இது ஒரு பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனை முறையாகும் மற்றும் இந்த ஏர்டெல் சேஃப் பே'-வை ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி வழியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க்கை

மேலும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க்கை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் யுபிஐ (ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்) அல்லது நிகர வங்கி மூலம் பரிவர்த்தனை செய்யும்போது, புதிய Airtel Safe Pay ஆனது ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கும் கூடுதல் "பாதுகாப்பு வட்டமாக" திகழும் என்றும் ஏர்டெல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தமில்லாமல் ரூ.78 மற்றும் ரூ.248 டேட்டா பேக்குகளை அறிமுகம் செய்த ஏர்டெல்.! என்னென்ன நன்மைகள்.!சத்தமில்லாமல் ரூ.78 மற்றும் ரூ.248 டேட்டா பேக்குகளை அறிமுகம் செய்த ஏர்டெல்.! என்னென்ன நன்மைகள்.!

பேமண்ட் கேட்வே ஆனது

குறிப்பாக இந்த புதிய பேமண்ட் கேட்வே ஆனது முற்றிலும் இலவசமானது. அதேபோல் இது ஃபிஷிங், திருடப்படும் சான்றுகள் அல்லது கடவுச்சொற்கள் மற்றும் போன் குளோனிங் போன்ற ஆன்லைன் திருட்டுகளில் இருந்து பாதுகாப்பை வழங்கும்.

வெளியிட்டுள்ள தகவலின்படி,

ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஏர்டெல் சேஃப் பே ஆனது two-factor authentication அங்கீகாரத்தின் தொழில் விதிமுறைகளுடன் ஒப்பிடும்போது கூடுதல் பேமண்ட் வேலிடேஷனை வழங்க ஏர்டெல்-இன் தொலைதொடர்பு நெட்வொர்க் நுண்ணறிவு உதவுகிறது எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் பொறுத்தவரை

இந்த ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் பொறுத்தவரை அதன் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் வழியிலாக வணிகர்களுக்கு, ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்ய உதவும். அதேபோல் ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் வீடியோ அழைப்பின் மூலம் கூட ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் அக்கவுண்ட்டைத் திறக்கலாம்.

தொற்றுநோய்க்கு பிந்தைய உலகில்

இப்போது டிஜிட்டல் பேமண்ட்ஸ் வசதியை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த கோவிட்-19 தொற்றுநோய்க்கு பிந்தைய உலகில், வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் மோசடிகளை தீர்க்கப்பட வேண்டும் என்று ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க்கின் எம்.டி மற்றும் நிர்வாக அதிகாரியான அனுப்ரதா பிஸ்வாஸ் கூறியுள்ளார்.

ஆனது பாதுகாப்பான

குறிப்பாக ஏர்டெல் சேஃப் பே ஆனது பாதுகாப்பான நெட்வொர்க் மற்றும் உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் தளங்களுடன் ஒன்றிணைந்து ஒரு தனித்துவமான சந்தை சிக்கலைத் தீர்க்கும் மற்றொரு கண்டுபிடிப்பு என்று அனுப்ரதா பிஸ்வாஸ் கூறியுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Airtel Introduces Safe Pay: The Right Way to Send Money: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X