ஏர்டெல் அதிரடி: வெறும் ரூ.249/-ல் ஜியோவை பழிக்குப்பழி வாங்கியது.!
இது ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய மூன்றாவது புதிய திட்டமாகும். இதற்கு முன்னர் ரூ.649/- போஸ்ட்பெயிட் மற்றும் ரூ.499/ ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகமானது.
ரிலையன்ஸ் ஜியோவின் ஆக்கிரோஷமான காம்போ (டேட்டா + வாய்ஸ்) திட்டங்களை எதிர்கொள்ளும் முனைப்பின் கீழ், பாரதி ஏர்டெல் நிறுவனம் அதன் ரூ.349/எ- திட்டத்தில் சில திருத்தங்களை நிகழ்த்தியுள்ள கையோடு, அதன் புதிய ரூ.249/- திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய மூன்றாவது புதிய திட்டமாகும். இதற்கு முன்னர் ரூ.649/- போஸ்ட்பெயிட் மற்றும் ரூ.499/ ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகமானது.

அனைத்து ஏர்டெல் பயனர்களுக்கும்.!
இந்த புதிய ரூ.249/- திட்டத்தின் சிறந்த பகுதி என்னவென்றால் இதுவொரு திறந்த வெளி சந்தை திட்டமாகும். அத அதாவது குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே அல்லது குறிப்பிட்ட வட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்கிற வரம்புகள் இல்லை. அனைத்து ஏர்டெல் பயனர்களுக்கும், ஏர்டெல் பயன்பாடு அல்லது வலைத்தளம் வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று அர்த்தம்.

ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டா.!
நன்மைகளை பொறுத்தவரை, மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஏர்டெல் ரூ.249/- ப்ரீபெய்ட் திட்டமானது ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவை அளிக்கிறது. அதே நேரத்தில் திருத்தம் பெற்ற ஏர்டெல் ரூ.349/- திட்டமானது இனி ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

ஏர்டெல் ரூ.249/-ன் நன்மைகள்.!
புதிய ஏர்டெல் ரூ.249/- திட்டமானது, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198/- உடன் நேரடியாக போட்டியிடும் மறுகையில், திருத்தப்பட்ட ஏர்டெல் ரூ.349/- ஆனது ஜியோவின் ரூ.299/-க்கு எதிராக செல்கிறது. 2 ஜிபி டேட்டா என்கிற நன்மையுடன் சேர்த்து, ஏர்டெல் ரூ.249/- ஆனது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. அதாவது ஜியோவின் ரூ.198/- திட்டம் போலவே, மொத்தம் 56 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

84 ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டமாக மாறியுள்ளது.!
மறுகையில் உள்ள ரூ.349/- திட்டமானது தற்போது முந்தைய 70ஜிபி அளவிலான டேட்டாவில் இருந்து 84 ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டமாக மாறியுள்ளது. இந்த திட்டமும் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் ரூ.349/-ன் இதர நன்மைகளை பொறுத்தவரை, ஜியோ போன்றே ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவைகளை வழங்குகிறது.

நியாயமான விலையில் கனரக டேட்டா.!
ஏர்டெல் அறிவித்துள்ள இந்த இரண்டு திட்டங்களுமே, நியாயமான விலையில் கனரக டேட்டா பயன்பாட்டை தேடும் பயனர்களுக்கான சிறந்த திட்டங்கள் ஆகும். குறிப்பாக ரூ.249/- ஆனது மிகவும் கவர்ச்சிகரமானதாகும். மேலும் அது ஜியோ திட்டத்துடன் சரிக்கு சமமான நிலையில் இருக்கிறது. சமீபத்தில், ஏர்டெல் ரூ.499/- அறிமுகமானதும் அது ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவு, வரம்பற்ற வாய்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நண்மைகளை மொத்தம் 82 நாட்களுக்கு வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.649/- நன்மைகள்.!
இறுதியாக, ஏர்டெல் ரூ.649/-ஐ பற்றி பேசுகையில், இதுவொரு போஸ்ட்பெயிட் திட்டமாகும். வரம்பற்ற வாய்ஸ் மற்றும் 50ஜிபி அளவிலான டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளம் மற்றும் முகநூல் பக்கத்துடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications