Home
News

ஏர்டெல் ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்.. என்னென்ன நன்மைகள்? எத்தனை நாட்கள் வேலிடிட்டி.. இதோ விவரம்..

ஏர்டெல் (Airtel) நிறுவனம் சத்தமின்றி ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தற்போது இந்நிறுவனம் ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக அதிக டேட்டா விரும்பும் ஏர்டெல் பயனர்களுக்கு இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1099 Prepaid Plan) ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்.. என்னென்ன நன்மைகள்?

அதுவும் இந்த திட்டம் ஏர்டெல் 4G மற்றும் 5G நெட்வொர்க்குகள் இரண்டிற்கும் அணுகலை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த திட்டத்தில் OTT நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் இலவச ஹெலோடியூன்கள் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு கூறியது போல் அதிக டேட்டா நன்மை மற்றும் அதிக நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த ஏர்டெல் ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது. ஒருவேளை அதிக நாட்கள் வேலிடிட்டி மற்றும் அதிக ஓடிடி சந்தா நன்மையை எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம்(airtel rs 1729 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் அதிக OTT சந்தா கிடைக்கும்.

பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் (zee5 premium) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (airtel xstream play) பிரீமியம் உள்ளிட்ட தரமான ஓடிடி சந்தா வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium)இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஏர்டெல் ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்.. என்னென்ன நன்மைகள்?

அதேபோல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம்.குறிப்பாக அதிக நாட்கள் வேலிடிட்டி, ஓடிடி, டேட்டா, வாய்ஸ் கால்கள் இந்த ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

மேலும் ஏர்டெல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் நல்ல வரவேற்பு உள்ளது.

source

Best Mobiles in India

English summary
Airtel Introduces Rs.1099 Unlimited 4G And 5G Plan: Full Details Inside
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X