Home
News

Airtel அதிரடி.. திடீரென 4 திட்டங்களின் நன்மைகள் அதிகரிப்பு.. இனிமேல் டெய்லி 4GB டேட்டா, 22 ஓடிடி!

ஏர்டெல் (Airtel) நிறுவனமானது அதன் 2025 பண்டிகை கால சலுகைகளை (Festive Offers 2025) அறிவித்து உள்ளது. இதன் கீழ் 1 டேட்டா பேக் மற்றும் 3 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்கள் என மொத்தம் 4 ஏர்டெல் திட்டங்களின் நன்மைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

1. ஏர்டெல் ரூ.349 அன்லிமிடெட் பிளான் புதிய நன்மைகள்: ஏர்டெல்லின் ரூ.349 திட்டமானது, 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் - அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

Airtel அதிரடி.. திடீரென 4 திட்டங்களின் நன்மைகள் அதிகரிப்பு!

மேலும் தினசரி டேட்டா ஒதுக்கீடு முடிந்த பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக இருக்கும். ஏர்டெல் ரிவார்ட்ஸ்-ன் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் (22 க்கும் மேற்பட்ட ஓடிடிகள் - 28 நாட்கள்), பெர்ப்ளக்ஸிட்டி ப்ரோ ஏஐ (12 மாதங்கள்) மற்றும் ஆப்பிள் மியூசிக் பிரீமியம் (6 மாதங்கள்) ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.

2. ஏர்டெல் ரூ.379 அன்லிமிடெட் பிளான் புதிய நன்மைகள்: ஏர்டெல்லின் ரூ.379 திட்டமானது, 1 மாதம் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் - அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

ரூ.349-ஐ போலவே தினசரி டேட்டா ஒதுக்கீடு முடிந்த பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக இருக்கும். மேலும் ஏர்டெல் ரிவார்ட்ஸ்-ன் கீழ் 30ஜிபி கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ், 6 மாதங்களுக்கு ஆப்பிள் மியூசிக், 12 மாதங்களுக்கு பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ மற்றும் இலவச ஹெலோடியூன்ஸ் (30 நாட்களுக்கு இலவசமாக ஏதேனும் ஒரு ட்யூனை செட் செய்யலாம்) ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.

3. ஏர்டெல் ரூ.449 அன்லிமிடெட் பிளான் புதிய நன்மைகள்: ஏர்டெல்லின் ரூ.449 திட்டமானது, 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் - அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் ஒரு நாளைக்கு 4ஜிபி டேட்டா (முன்னதாக இது 3ஜிபி டேட்டாவாக இருந்ததது) ஆகிய நன்மைகளை வழங்குகிறது. தினசரி டேட்டா ஒதுக்கீடு முடிந்த பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக இருக்கும்.

மேலும் ஏர்டெல் ரிவார்ட்ஸ்-ன் கீழ் கூகுள் ஒன் (30 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் (22 ஓடிடிகளுக்கான அணுகல்கள் - 28 நாட்களுக்கு), ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (28 நாட்களுக்கு), ஆப்பிள் மியூசிக் சந்தா (6 மாதங்களுக்கு), பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ சந்தா (12 மாதங்களுக்கு) மற்றும் இலவச ஹெலோடியூன்ஸ் (30 நாட்களுக்கு) ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.

4. ஏர்டெல் ஏர்டெல் ரூ.100 டேட்டா பேக்கின் புதிய நன்மைகள்: ஏர்டெல்லின் இந்த டேட்டா பேக் இப்போது மொத்தம் 6 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. நினைவூட்டும் வண்ணம் முன்பு இது 5 ஜிபி ஆக இருந்தது. 6ஜிபி என்கிற டேட்டா லிமிட்டிற்கு பினட் ரூ.0.50/எம்பி என்கிற முறையில் கட்டணம் வசூலிக்கப்படும் . இந்த பேக்கின் சர்வீஸ் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதன் கீழ் ஏர்டெல் ரிவர்ட்ஸ் ஆக 30 நாட்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் (22க்கும் மேற்ப்பட்ட ஓடிடி) சந்தாவும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Airtel Introduces Festive Offer with Added Benefits on Rs 349 Rs 379 Rs 449 Plans Rs 100 Data Pack
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X