Airtel அதிரடி.. இனி வாய்ஸ் கால்கள் மற்றும் SMS-க்கு மட்டும் தனி பிளான்கள்.. என்ன விலை?
டிராய் (TRAI) உத்தரவுப்படி டேட்டா இல்லாமல் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை (voice and SMS services)மட்டும் எதிர்பார்க்கும் ஏர்டெல் (Airtel) பயனர்களுக்கு இரண்டு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக அழைப்பு நன்மைகள் மட்டுமே எதிர்பார்க்கும் பெரியவர்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் இந்த திட்டங்கள் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதாவது ஏர்டெல் தற்போது ரூ.509 மற்றும் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டங்களைத் தான் அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த இரண்டு ஏர்டெல் திட்டங்களின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ 509 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 509 plan Details) ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மை இந்த திட்டத்தில் உள்ளது.
அதேபோல் ஏர்டெல் ரூ 509 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 900 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகளும் இந்த அசத்தலான ஏர்டெல் ரூ 509 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன. ஆனால் இதில் டேட்டா நன்மை இல்லை.
ஏர்டெல் ரூ 1999 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1999 plan Details) ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மை இந்த திட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஏர்டெல் ரூ 1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 3600 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகளும் இந்த அசத்தலான ஏர்டெல் ரூ 1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன. குறிப்பாக இந்த திட்டத்திலும் டேட்டா நன்மை கிடைக்காது. ஒருவேளை அதிக டேட்டா, எஸ்எம்எஸ், ஓடிடி, வாய்ஸ் கால்கள் எதிர்பார்க்கும் ஏர்டெல் பயனர்கள் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

அதன்படி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் பிளான் (Airtel Rs 3999 prepaid plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இதில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (disney + Hotstar) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம்.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data) போன்ற போன்ற சலுகைகள் இந்த திட்டம் மூலம் நாம் பெறமுடியும்.


Click it and Unblock the Notifications








