Home
News

இப்பவாச்சும் கொடுத்தீங்களே சந்தோஷம்.. மலிவு விலை திட்டங்களில் கூடுதல் டேட்டா வழங்கிய Airtel..

ஏர்டெல் (Airtel) நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயத்தியது. குறிப்பாக இந்நிறுவனம் மலிவு விலையில் வழங்கிய ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்த்தப்பட்டதால் பயனர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் புதிய டேட்டா திட்டம் மற்றும் சில திட்டங்களில் கூடுதல் டேட்டா சலுகையை வழங்கி உள்ளது.

அதாவது தற்போது ஏர்டெல் நிறுவனம் ரூ.26 டேட்டா பேக் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பின்பு ரூ.77 மற்றும் 121 டேட்டா பேக் திட்டங்களில் கூடுதல் டேட்டாவை வழங்கி உள்ளது இந்நிறுவனம். இப்போது இந்த திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மலிவு விலை திட்டங்களில் கூடுதல் டேட்டா வழங்கிய ஏர்டெல்..

ஏர்டெல் ரூ.26 டேட்டா பேக் (Airtel Rs 26 data pack) ஆனது ஒரு நாள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இதில் ரீசார்ஜ் செய்தால் 1.5ஜிபி டேட்டா வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.22 திட்டம் 1ஜிபி டேட்டாவும், ரூ.33 திட்டம் 2ஜிபி டேட்டாவும், ரூ.49 திட்டம் அன்லிமிடெட் டேட்டாவும் வழங்குகின்றன. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.11 திட்டம் ஆனது 1 மணி நேரத்திற்கு அன்லிமிடெட் டேட்டா நன்மையை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.77 டேட்டா பேக் (Airtel Rs 77 data pack) ஆனது முன்பு 4ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கி வந்தது. ஆனால் தற்போது இந்த பேக்கில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் 5ஜி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி உங்களுடைய பேஸ் பிளானின் சர்வீஸ் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும். இதுதவிர ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரூ.77 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக 1ஜிபி டேட்டாவைப் பெறமுடியும். எனவே இதில் மொத்தமாக 6ஜிபி வரை டேட்டா கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.121 டேட்டா பேக் (Airtel Rs 121 data pack) ஆனது முன்பு 5ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கி வந்தது. ஆனால் தற்போது இந்த பேக்கில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் 6ஜி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி உங்களுடைய பேஸ் பிளானின் சர்வீஸ் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும். அதேபோல் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரூ.121 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக 2ஜிபி டேட்டாவைப் பெறமுடியும். எனவே இதில் மொத்தமாக 8ஜிபி வரை டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏர்டெல் வழங்கும் ரூ.3999 திட்டத்தின் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.365 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. இதுதவிர பல அசத்தலான சலுகைகள் வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம்.

மலிவு விலை திட்டங்களில் கூடுதல் டேட்டா வழங்கிய ஏர்டெல்..

அதன்படி இந்த ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 Prepaid plan) ஆனது 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (disney + Hotstar) சந்தாவை வழங்குகிறது. மேலும் அலிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கிடைக்கும். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

பின்பு ஏர்டெல் ரூ.3999 திட்டம் ஆனது அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), விங்க் மியூசிக் (Wynk Music), அன்லிமிடெட் 5ஜி உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel introduced Rs 26 data pack and offered additional data on some plans: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X