Home
News

இனி இதுதான் எல்லோருடைய Airtel ரீசார்ஜ்.. ரூ.399 திட்டம் மீண்டும் அறிமுகம்.. 4ஜி, 5ஜி டேட்டா, வாய்ஸ், SMS, OTT!

ஜியோ நிறுவனத்தின் முக்கிய போட்டியாளர் ஆன மற்றும் இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனம் ஆன பாரதி ஏர்டெல், அதன் ப்ரீபெய்ட் பிரிவின் கீழ் ரூ.400 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை (Airtel New Prepaid Plan) அறிமுகம் செய்து உள்ளது.

என்ன விலை? ஏர்டெல் நிறுவனம் ரூ.399 மதிப்புள்ள புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை (Airtel Rs.399 Prepaid Plan) அறிமுகம் செய்து உள்ளது. கடந்த ஜூலை 2024 அமலுக்கு வந்த ரீசார்ஜ் கட்டண விலை உயர்வுகளுக்கு (Mobile Recharge Tariff Hike) முன்னதாக, ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் ரூ.399 மதிப்புள்ள திட்டமொன்று ரீசார்ஜ் செய்ய கிடைத்தது.

இனி இதுதான் எல்லோருடைய Airtel ரீசார்ஜ்.. ரூ.399 திட்டம் அறிமுகம்!

இருப்பினும் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஒரு வருடம் முன்பு வழங்கிய அதே நன்மைகளுடன் வரவில்லை. ஆனால் ரூ.400 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு நல்ல ஏர்டெல்ப்ரீபெய்ட் ரீசார்ஜை (Best Airtel Plan Under Rs.400) தேடுபவர்களை ஈர்க்கும் அளவிற்கு போதுமான நன்மைகளை வழங்குகிறது.

ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி (Airtel Rs.399 Plan Benefits Validity): ஏர்டெல்லின் புதிய ரூ.399 திட்டமானது தினசரி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் உடன் வருகிறது. டெய்லி 2ஜிபி டேட்டாவிற்கு மேல் வழங்குவதால் இந்த திட்டம் - ஏர்டெல்லின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபரையும் (Unlimited 5G Data Offer) வழங்கும்.

மேலும் ஏர்டெல்லின் ரூ,399 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் இலவச ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் (Jio Hotstar Mobile subscription) அணுக கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதாவது டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ், 5ஜி டேட்டா மற்றும் ஓடிடி ஆகிய அனைத்து நன்மைகளையும் - ஒரு நாளைக்கு ரூ.14.25 என்கிற செலவின் (Cost Per Day) கீழ் வழங்குகிறது

நினைவூட்டும் வண்ணம் ஏர்டெல்லின் பழைய ரூ.399 திட்டமானதும், கட்டண உயர்வுக்கு முன்பு, தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்கியது. இப்போது அது தினசரி 2.5ஜிபி டேட்டாவாக குறைக்கப்பட்டுள்ளது. இது கட்டண உயர்வின் விளைவாகும். இந்த திட்டம் உங்களுக்கு 4ஜி மட்டுமல்ல, 5ஜி நெட்வொர்க்கின் கீழும் ஏராளமான டேட்டாவை வழங்கும்.

கூடவே ரூ.399 திட்டத்தின் கீழ் ஓடிடி நன்மையும் கிடைக்கிறது. 28 நாட்களுக்கு ரூ.399 செலுத்துவது என்பது அடிப்படையில் ஒரு போஸ்ட்பெய்டு சிம் கார்டுக்கு (Postpaid SIM Card) பணம் செலுத்துவதற்கு சமம் என்று நீங்கள் நினைத்தாலும், இதன்கீழ் மொத்தம் 70ஜிபி டேட்டா (Total 70GB Data) கிடைக்கிறது என்பதும், போதாக்குறைக்கு 5ஜி டேட்டா கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ரூ.399 திட்டம் இப்போது இந்தியா முழுவதும் உள்ள ஏர்டெல் பயனர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டத்தை "மீண்டும்" கொண்டு வருவதன் விளைவாக, ஏர்டெல் நிறுவனம் ஆனது அதன் நுகர்வோருக்கு கூடுதல் விருப்பங்களை வழங்க முடியும், அதோடு நிறுவனத்தின் ஏஆர்பியு-வை (ARPU), அதாவது ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (Average revenue per user) அதிகரிக்கவும் முடியும்.

ஆனால் இது ஏர்டெல் சிம் கார்ட்டை இரண்டாவது சிம் கார்டு (Airtel As Second SIM Card) ஆக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தக்கூடிய திட்டம் அல்ல. ஏனென்றால் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, அதன் ஜியோ அன்லிமிடெட் 2025 சலுகையுடன் வரும் எந்தவொரு திட்டத்திலும் 90 நாட்கள் இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Introduced New Rs 399 Prepaid Plan For All Users in India Benefits Validity Explained
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X