Home
News

புதுவகை சிம் கார்டுகளை வழங்கும் Airtel.. என்ன ஆச்சு? யாருக்கெல்லாம் கிடைக்கும்? இது கம்பெனியின் 5G SIM-ஆ?

இந்திய டெலிகாம் துறையிலேயே இப்படி ஒரு விஷயத்தை யாருமே (ஜியோ, வோடாபோன் ஐடியா, பிஎஸ்என்எல்) செய்தது இல்லை என்று கூறும்படியான ஒரு வேலையை ஏர்டெல் செய்துள்ளது. அதென்ன வேலை? அதனால் ஏர்டெல் (Airtel) நிறுவனத்திற்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் என்ன பயன்? இதோ விவரங்கள்:

பார்தி ஏர்டெல் நிறுவனம், விர்ஜின் பிளாஸ்டிக்கில் (Virgin plastic) இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட பிவிசி சிம் கார்டுகளுக்கு (Recycled PVC SIM cards) மாறுவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இப்படியொரு தொழில்துறை மாற்றத்தை ஏற்படுத்திய முதல் தொலைத்தொடர்பு நிறுவனம் - பார்தி ஏர்டெல் ஆகும்.

புதுவகை சிம் கார்டுகளை வழங்க தொடங்கிய Airtel நிறுவனம்!

ஏர்டெல் நிறுவனத்தின் கூற்றுப்படி, சிம் கார்டுகளை தயாரிப்பதற்காக விர்ஜின் பிளாஸ்டிக்கை தவிர்ப்பதன் மூலம் கிரீன்ஹவுஸ் வாயுக்களை குறைத்தல் (reducing greenhouse gases), கழிவு குறைப்பு (Waste reduction), மறுசுழற்சி மற்றும் தயாரிப்பு மறுபயன்பாடு (recycling and product reuse) போன்றவைகளை ஊக்குவிக்கிறது.

மேலும் இந்த புதிய மாற்றத்தின் மூலம், 165 டன்களுக்கு மேலான விர்ஜின் பிளாஸ்டிக் உற்பத்தியை (Generation of over 165 tonnes of virgin plastic) கட்டுப்படுத்த முடியும் என்றும் ஏர்டெல் நம்புகிறது. இப்படியாக ஒரு வருடத்தில் 690 டன்களுக்கும் அதிகமான சிஓ2 உற்பத்தியையும் (CO2 equivalent) குறைக்க முடியும்.

புதுவகை சிம் கார்டுகளை வழங்க தொடங்கிய Airtel நிறுவனம்!

ஒட்டுமொத்தமாக ஏர்டெல்லின் இந்த புதிய வகை சிம் கார்டு ஆனது பிரத்யேகமான 5ஜி சிம் கார்டுகளோ அல்லது குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்க கூடிய ஸ்பெஷல் கார்டுகளோ அல்ல. முன்பை போலவே அணைத்து வகையான புதிய மற்றும் பழைய பயனர்களுக்கு கிடைத்தபடியே மறுசுழற்சி செய்யப்பட்ட புதிய பிவிசி ஏர்டெல் சிம் கார்டுகலானதும் கூட அனைவருக்கும் கிடைக்கும்!

சமீபத்தில் வோடபோன் ஐடியா கூட புதுவகை சிம் கார்டுகளை வழங்க தொடங்கியது; அனால் அவைகள் இசிம்கள் (eSIM) ஆகும். ஆனால் இது குறிப்பிட்ட தொலைத்தொடர்பு வட்டங்களில் உள்ள ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது வழங்கப்படுகிறது. ஆனால் போஸ்ட்பெய்டு சந்தாதாரர்களை பொறுத்தவரை, பல வட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விஐ இசிம்கள் எளிமையாக அணுக கிடைக்கிறது.

புதுவகை சிம் கார்டுகளை வழங்க தொடங்கிய Airtel நிறுவனம்!

எந்தெந்த வட்டங்களில் உள்ள போஸ்ட்பெய்டு சந்தாதாரர்களுக்கு விஐ இசிம் கிடைக்கும்? சென்னை, தமிழ்நாடு, மும்பை, டெல்லி, குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் கோவா, உ.பி (கிழக்கு), கொல்கத்தா, கர்நாடகா, கேரளா, வங்காளத்தின் இதர பகுதிகள், ஆந்திரா பிரதேசம் & தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா, உ.பி (மேற்கு) மற்றும் பீகார்.

எந்தெந்த வட்டங்களில் உள்ள ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு விஐ இசிம் கிடைக்கும்? இப்போதைக்கு மும்பை, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபில் உள்ள ப்ரீபெய்டு சந்தாதாரர்களால் மட்டுமே விஐ இசிம் கார்டுகளை பெற முடியும். வோடபோன் ஐடியா நிறுவனத்தின் இணையதளத்தின்படி, பிற வட்டங்களில் உள்ள ப்ரீபெய்டு பயனர்கள் இசிம் கார்டுகளை பெற முடியாது. இந்த போக்கு எதிர்காலத்தில் மாறலாம்.

ப்ரீபெயிட் பயனர்களை "ஓரங்கட்டும்" வோடாபோனின் இந்த போக்கு, மேலும் பல கஸ்டமர்களை இழக்க வழிவகுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் இந்தியாவில் இசிம் சந்தை ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது; ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் (Flagship Smartphones) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு மட்டுமான ஆதரவை வழங்குகிறது. இந்த நேரத்தில் ​​வரையறுக்கப்பட்ட வட்டங்களில் உள்ள சந்தாதாரர்களுக்கு மட்டுமே இசிம் கொடுப்பது, சந்தாதாரர் இழப்புக்கு வழிவகுக்கும்.

ஏற்கனவே நிதி சிக்கல், தள்ளிபோய் கொண்டே உருகும் 5ஜி அறிமுகம், ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்களின் விலை நிர்ணயம் மற்றும் நன்மைகளுடன் போட்டிபோட முடியாத சூழ்நிலை போன்ற காரணங்களால் வோடபோன் ஐடியாவானது மெல்ல மெல்ல தனது வாடிக்கையார்களை இழந்து வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது..

டிராய் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த டிசம்பர் 2023-ல், வோடபோன் ஐடியா நிறுவனமானது 1.36 மில்லியன் சந்தாதாரர்களை இழந்ததுள்ளது. இதன் விளைவாக விஐ-யின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 223.04 மில்லியனாக குறைந்துள்ளது. வோடபோன் ஐடியாவிற்கு அடுத்தப்படியாக.. மோசமான நிலையில் இருப்பது அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனமே ஆகும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Introduced New Recycled PVC SIM Cards to Avoid Virgin plastic SIM Cards Here is Why
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X