ஜியோ நிறுவனத்தை போலவே ஏர்டெல் நிறுவனமும் அறிமுகம் செய்த புதிய வசதி.!

|

அன்மையில் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுககு ஏடிஎம் ரீசார்ஜ் வசதியை அறிமுகம் செய்தது, தற்சமயம் ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு இதேபோன்று வசதியை அறிமுகம் செய்துள்ளது.

 ஏர்டெல் எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ

ஏர்டெல் எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ

ஆனால் ஏர்டெல் நிறுவனம் ஒரு படி மேலே போய் மளிகைக் கடைகள் மற்றும் மருந்தகங்கள் போன்ற கூடுதல் விருப்பங்களுடன் சில வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது, அது என்னவென்றால், இரு வங்கிகளின் ஏடிஎம்களிலும் ரீசார்ஜ் வசதியை செயல்படுத்த ஏர்டெல் எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

பிக் பஜார் மற்றும் அப்பல்லோ

மேலும் ரீசார்ஜ் வசதிக்காக தொலைத்தொடர்பு நிறுவனம் பிக் பஜார் மற்றும் அப்பல்லோ மருந்தகங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதன்படி எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பயனர்கள் அந்தந்த ஏடிஎம்களில் இருந்து தங்கள் ஏர்டெல் ப்ரீபெய்டு எண்களை ரீசார்ஜ் செய்ய முடியும். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், ஜியோவைப் போலவே இருக்கும்,அங்கு வாடிக்கையாளர் ரீசார்ஜ் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து அவர்களின் மொபைல் எண்ணை உள்ளிடலாம். ரீசார்ஜ் தொகை அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.

சியோமியின் 60-இன்ச், 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!சியோமியின் 60-இன்ச், 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

 ஏடிஎம் ரீசார்ஜ் புதிய

ஏர்டெல் நிறுவனத்தின் வலைத்தளம் அல்லது அதன் மொபைல் பயன்பாடு மூலம் ஆன்லைனில் தங்கள் கட்டணங்களைரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. மேலும் கூகுள் பே, பேடிஎம் மற்றும் பல விருப்பங்களை பயன்படுத்தியும் ரீசார்ஜ்
செய்ய முடியும். ஒருவேளை ஆன்லைன் ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு இது சாத்தியமான விருப்பமான தேர்வாக உள்ளது ஏர்டெல் கொண்டுவந்துள்ள இந்த ஏடிஎம் ரீசார்ஜ் புதிய வசதி.

80 மில்லியன் ப்ரீபெய்டு

ஏர்டெல் நிறுவனம் ஊரடங்கு மத்தியில் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய வசதி கண்டிப்பாக பலருக்கும் உதவும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. டெல்கோ தனது குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களில் 80 மில்லியன் ப்ரீபெய்டு பயனர்களுக்கு செல்லுபடியை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.இந்த வாடிக்கையாளர்களின் ப்ரீபெய்டு கணக்குகளில் ரூ.10டாக்டைமையும் இது செலுத்திகிறது.

ஏர்டெல் நிறுவனம்

குறிப்பாக லாக்டவுன் காரணமாக போக்குவரத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்த போதிலும் அதன் நெட்வொர்க் சீராக இயங்கும்என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 21 நாட்கள் ஊரடங்கு

பின்பு கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர். பாரதி ஏர்டெல் நிறுவனம் இதனைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்பிலான 'வொர்க் ஃப்ரம் ஹோம்' ஆட் ஆன் திட்டங்களை கொண்டுவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel Introduced New Recharge Feature: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X