ஒரே நேரத்தில் 9 புதிய ரீசார்ஜ்களை அறிமுகம் செய்த AIRTEL.. 1 நாள் முதல் 365 நாட்கள் வரை வேலிடிட்டி!

|

பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் ஒரே நேரத்தில் 9 புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

அதென்ன திட்டங்கள்? அதன் விலை நிர்ணயங்கள் என்ன? அவைகள் என்னென்ன நன்மைகளை வழங்குகின்றன? இதோ விவரங்கள்:

ப்ரீபெய்ட் பாதி.. போஸ்ட்பெயிட் மீதி!

ப்ரீபெய்ட் பாதி.. போஸ்ட்பெயிட் மீதி!

ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 9 புதிய திட்டங்களில் 5 - போஸ்ட்பெயிட் திட்டங்கள் ஆகும். மீதமுள்ள நான்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆகும்.

இருந்தாலும் கூட இந்த 9 திட்டங்களுமே ஏர்டெல் நிறுவனத்தின் வேர்ல்ட் பாஸ் (World Pass) என்கிற தொகுப்பின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன!

அடிச்சான் பாரு.. இதுதான் NOKIA-வின் உண்மையான கம்பேக்.. ஒரே ஒரு அறிவிப்பு.. ஷாக் ஆகிப்போன சீன கம்பெனிகள்!அடிச்சான் பாரு.. இதுதான் NOKIA-வின் உண்மையான கம்பேக்.. ஒரே ஒரு அறிவிப்பு.. ஷாக் ஆகிப்போன சீன கம்பெனிகள்!

வேர்ல்ட் பாஸ் என்றால் என்ன?

வேர்ல்ட் பாஸ் என்றால் என்ன?

வேர்ல்ட் பாஸ் என்பது அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கான இன்டர்நேஷனல் ரோமிங் திட்டங்கள் (International roaming plans) ஆகும். அதாவது இந்த திட்டங்கள் அனைத்து நாடுகளிலும் வேலை செய்யும்.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இந்த திட்டங்கள் மொத்தம் 184 நாடுகளில் செல்லுபடியாகும் மற்றும் சில கூடுதல் நன்மைகளையும் வழங்கும்.

ரூ.649 முதல் ரூ.2,997 வரை 4  ப்ரீபெய்ட் திட்டங்கள்

ரூ.649 முதல் ரூ.2,997 வரை 4 ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஏர்டெல் வேர்ல்ட் பாஸ் தொகுப்பின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியல் இதோ:

ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம் - இது 1 நாள் செல்லுபடியாகும்; 500MB அளவிலான டேட்டா, 10 எஸ்எம்எஸ்கள் மற்றும் 100 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்களை வழங்கும்.

ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் - இது 10 நாட்கள் செல்லுபடியாகும்; 20 எஸ்எம்எஸ்கள், 1ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்களை வழங்கும்.

ரூ.2,998 ப்ரீபெய்ட் திட்டம் - இது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். 200 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால், 5 ஜிபி டேட்டா, 20 எஸ்எம்எஸ்களை வழங்கும்.

ரூ.2,997 ப்ரீபெய்ட் திட்டம் - இது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். 2ஜிபி டேட்டா, 100 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால், 20 எஸ்எம்எஸ்களை வழங்கும்.

YouTube செட்டிங்ஸ்-ல் ஒளிந்திருக்கும் ரீசெட் ஆப்ஷன்.. மாதத்திற்கு 1 முறை கிளிக் செய்வதால் இப்படி ஒரு நன்மையா?YouTube செட்டிங்ஸ்-ல் ஒளிந்திருக்கும் ரீசெட் ஆப்ஷன்.. மாதத்திற்கு 1 முறை கிளிக் செய்வதால் இப்படி ஒரு நன்மையா?

ரூ.649 முதல் ரூ.14,999 வரை 5 போஸ்ட்பெய்ட் திட்டங்கள்!

ரூ.649 முதல் ரூ.14,999 வரை 5 போஸ்ட்பெய்ட் திட்டங்கள்!

ஏர்டெல் வேர்ல்ட் பாஸ் தொகுப்பின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள போஸ்ட்பெய்ட் திட்டங்களின் பட்டியல் இதோ:

ரூ.649 போஸ்ட்பெய்ட் திட்டம் - இது 1 நாள் செல்லுபடியாகும்; 10 எஸ்எம்எஸ்கள், 500எம்பி டேட்டா மற்றும் 100 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்களை வழங்கும்.

ரூ.2999 போஸ்ட்பெய்ட் திட்டம் - இது 10 நாட்கள் செல்லுபடியாகும்; 20 எஸ்எம்எஸ்கள், 5ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்களை வழங்கும்.

ரூ.3,999 போஸ்ட்பெய்ட் திட்டம் - இது 30 நாட்கள் செல்லுபடியாகும்; 20 எஸ்எம்எஸ்கள், 12ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்களை வழங்கும்.

ரூ.5,999 போஸ்ட்பெய்ட் திட்டம் - இது 90 நாட்கள் செல்லுபடியாகும்; 100 எஸ்எம்எஸ்கள், 2ஜிபி டேட்டா மற்றும் 900 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்களை வழங்கும்.

ரூ.14,999 போஸ்ட்பெய்ட் திட்டம் - இது 365 நாட்கள் செல்லுபடியாகும்; 100 எஸ்எம்எஸ்கள், 15ஜிபி டேட்டா மற்றும் 3000 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்களை வழங்கும்.

ஏர்டெல் வேர்ல்ட் பாஸ் திட்டங்களின் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் என்னென்ன?

ஏர்டெல் வேர்ல்ட் பாஸ் திட்டங்களின் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் என்னென்ன?

இந்த பாஸின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், வெவ்வேறு பிராந்தியங்களில் உள்ள சேவைகளை அணுக நீங்கள் வெவ்வேறு ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை

மேலும் கூடுதல் கட்டணமின்றி 24 மணிநேர வாடிக்கையாளர் ஆதரவு மையத்தையும் நீங்கள் அணுகலாம். இதற்காக நீங்கள் பிரத்யேக ஹெல்ப்லைன் நம்பரையும் பெறுவீர்கள்.

சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

போஸ்ட்பெய்டில் சில எக்ஸ்ட்ரா நன்மைகள் கிடைக்கும்!

போஸ்ட்பெய்டில் சில எக்ஸ்ட்ரா நன்மைகள் கிடைக்கும்!

வேர்ல்ட் பாஸ் தொகுப்பின் போஸ்ட்பெய்டு திட்டங்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, டேட்டா லிமிட் முடிந்தாலும் கூட (குறைந்தபட்ச வேகத்தில்) அன்லிமிடெட் டேட்டா அணுகல் கிடைக்கும்.

அந்த அளவிலான இன்டர்நெட் ஸ்பீட் ஆனது ஆன்லைன் மெசேஜிங் பிளாட்ஃபார்ம்களை பயன்படுத்த போதுமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்!

Best Mobiles in India

English summary
Airtel Introduced 9 New International Roaming Plans Called World Pass Check Price Benefits Validity

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X