இரவோடு இரவாக.. ரூ.200 - ரூ.600 பட்ஜெட்டில்.. 3 புதிய Airtel திட்டங்கள் அறிமுகம்!
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய டெலிகாம் ஆப்ரேட்டரான ஏர்டெல், ரூ.200 முதல் ரூ.600-க்குள் என்கிற பட்ஜெட்டில், 3 புதிய ரீசார்ஜ் திட்டங்களை சத்தமின்றி (நேற்று சாயுங்காலம்) அறிமுகம் செய்துள்ளது. அதென்ன திட்டங்கள்? அவைகளின் விலை நிர்ணயம் என்ன? நன்மைகள் என்ன? இதோ விவரங்கள்:
ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்காக 3 புதிய இன்-ஃப்ளைட் திட்டங்களை (In-flight Plans) அறிமுகப்படுத்தியுள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே இந்த திட்டங்கள் விமானத்தில் பயணிக்கும் போது ஏர்டெல் கஸ்டமர்களுக்கு உதவக்கூடிய திட்டங்களாகும்.

ஏர்டெல்லின் இந்த 3 புதிய இன்-ஃப்ளைட் திட்டங்களுமே ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ஆகிய இரண்டு வகையான பயனர்களுக்குமே ஒரே மாதிரியான டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை ஒரே மாதிரியான வேலிடிட்டியின் கீழ் வழங்குவதால்.. இதை மொத்தம் 6 திட்டங்களாகவும் பார்க்கலாம்.
ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள 3 புதிய இன்-ஃப்ளைட் திட்டங்களின் விலை நிர்ணயம்: ரூ.195, ரூ.295 மற்றும் ரூ.595 ஆகும். இந்த திட்டங்களை ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ஆகிய இருவருமே ரீசார்ஜ் செய்யலாம். இம்மூன்று திட்டங்களுமே இருவருக்குமே ஒரே மாதிரியான நன்மைகளையே வழங்கும்.

ஏர்டெல் ரூ.195 இன்-ஃப்ளைட் திட்டத்தின் நன்மைகள்: ரூ.195 மதிப்புள்ள ஏர்டெல்லின் புதிய இன்-ஃப்ளைட் திட்டமானது 250 எம்பி டேட்டா, 100 நிமிடங்களுக்கான அவுட்கோயிங் கால்ஸ் (Outgoing Calls) மற்றும் 100 அவுட்கோயிங் எஸ்எம்எஸ் (Outgoing SMS) போன்ற நன்மைகளை 24 மணி நேரம் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்கும்.
ஏர்டெல் ரூ.295 இன்-ஃப்ளைட் திட்டத்தின் நன்மைகள்: ரூ.295 மதிப்புள்ள இன்-ஃப்ளைட் திட்டமானது ரூ.195 வழங்கும் அதே அவுட்கோயிங் கால்ஸ் மற்றும் அவுட்கோயிங் எஸ்எம்எஸ் நன்மைகளை அதே 24 மணிநேரம் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. ஆனால் 250 எம்பி டேட்டாவிற்கு பதிலாக 500 எம்பி டேட்டாவை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.595 இன்-ஃப்ளைட் திட்டத்தின் நன்மைகள்: ரூ.195 மதிப்புள்ள ஏர்டெல்லின் புதிய இன்-ஃப்ளைட் திட்டமானது 1 ஜிபி டேட்டா, 100 நிமிடங்களுக்கான அவுட்கோயிங் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 அவுட்கோயிங் எஸ்எம்எஸ்களை 24 மணி நேரம் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்கும்.
ஏர்டெல்லின் இன்-ஃப்ளைட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, விமான பயணத்தின் போது ஆதரவளிக்க ஏர்டெல் 24X7 காண்டாக்ட் சென்டரையும் கொண்டுள்ளது. கூடுதலாக, ஏர்டெல் நிறுவனம் ஒரு பிரத்யேக வாட்ஸ்அப் நம்பரையும் கொண்டுள்ளது (99100-99100). இதன் கீழ் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் நிகழ்நேர தீர்விற்காக நெட்வொர்க் நிபுணர் குழுவை அழைத்து தேவையான ஆதரவை பெறலாம்.
சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூ.49 மதிப்புள்ள தனது டேட்டா பேக் (Data Pack) திட்டத்தின் நன்மைகளை திருத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த திட்டம் முன்பை விட 3 மடங்கு அதிக டேட்டாவை வழங்குகிறது. முன்னதாக ஏர்டெல் ரூ.49 டேட்டா பேக் ஆனது 1 நாள் வேலிடிட்டியின் கீழ் 6ஜிபி அளவிலான ஹை-ஸ்பீட் டேட்டாவை மட்டுமே வழங்கியது.
தற்போது ரூ.49 டேட்டா பேக்கின் கீழ் 20ஜிபி அளவிலான எஃப்யுபி (FUP - Fair Usage Policy) டேட்டா கிடைக்கிறது. குறிப்பிட்ட டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். அதாவது இதுவொரு அன்லிமிடெட் டேட்டா பேக் ஆக செயல்படும் என்று அர்த்தம்.
ரூ.49 டேட்டா பேக் மீது நிகழ்த்தப்பட்டுள்ள இந்த திருத்தத்தின் விளைவாக, பார்தி ஏர்டெல்லின் கீழ் இப்போது 2 டேட்டா பேக்குகள், அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகின்றன. நினைவூட்டும் வண்ணம் ஏர்டெல்லிடம் 2 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் ரூ.99 டேட்டா பேக்கும்
ஏர்டெல் ரூ.99 டேட்டா பேக்கின் நன்மைகளை பொறுத்தவரை, இது ஒரு நாளைக்கு 20ஜிபி டேட்டாவை 2 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. அதாவது இதன் கீழ் மொத்தம் 40ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் ரூ.49-ஐ போலவே (ஒரு நாளுக்கான) குறிப்பிட்ட டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.


Click it and Unblock the Notifications