ஏர்டெல் டிவியில் ஹாட்ஸ்டார் வீடியோக்களை இலவசமாக பார்க்கலாம்.!
பிரீமியம் தரவுகளை பார்க்க மாதம் ரூ.199 கட்டணம் செலுத்த வேண்டும், இந்த தொகையை ஏர்டெல் டிவி அல்லது ஆன்லைன் மூலம் செலுத்த முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முய்ற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி ஏர்டெல் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஹாட்ஸ்டார் சேவையை இலவசமாக பார்த்து ரசிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் கடந்த ஆண்டு ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல் டிவியை அறிமுகப்படுத்தியது, அவற்றில் 300-க்கும் அதிகமான நேரலை தொலைகாட்சி சேனல்களையும் வழங்குவதாகவும்,6000-க்கும் அதிகமான திரைப்படங்கள் பிரபலமான நிகழ்ச்சிகளும் அணுக கிடைக்கும் என்று அறிவித்திருந்தது.
தற்சமயம் ஏர்டெல் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஹாட்ஸ்டார் சேவை இலவசமாக வழங்கப்பட்டதால் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் 2016-ம் ஆண்டு ஜியோ நிறுவனம் ஹாட்ஸ்டார் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது தொடர்ந்து இப்போது ஏர்டெல் நிறுவனமும் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மேலும் இப்போது ஏர்டெல் டிவி செயலியைக் கொண்டு ஹாட்ஸ்டார் தரவுகளை சந்தா செலுத்தாமல் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு ஹாட்ஸ்டார் சேவையை மட்டும் இலவசமாக பார்க்க முடியும் என்ற வகையில், பிரீமியம் தரவுகளுக்கு தனியே பணம் செலுத்த வேண்டும்.

பிரீமியம் தரவுகளை பார்க்க மாதம் ரூ.199 கட்டணம் செலுத்த வேண்டும், இந்த தொகையை ஏர்டெல் டிவி அல்லது ஆன்லைன் மூலம் செலுத்த முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாட்ஸ்டார் சேவையை பொருத்தவரை ஏர்டெல் மற்றும் ஜியோ வழங்குவது இண்டர்நெட் போன்றவையே, மேலும் இணையத்தில் கிடைக்கும் தரவுகளை ஆப்ரேட்டர்களால் இலவசமாக வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்து.


இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஹாட்ஸ்டார் வீடியோக்களை அதிகம் விரும்புகின்றனர், மேலும் இந்தப்
பயன்பாடு இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications