Home
News

Airtel போட்ட போடு.. இனி 2 சிம் கார்டுக்கு 1 ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 105 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!

ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு 1 ரீசார்ஜ் வழியாக 2 சிம் கார்டுகளுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா உள்ளிட்ட சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. மற்ற போஸ்ட்பெய்ட் திட்டங்களை போல் கூடுதலாக கட்டணம் செலுத்தி சிம் கார்டை இணைக்க வேண்டிய வேலை இதில் கிடையாது. இந்த திட்டத்தின் விலையிலேயே 2 சிம் கார்டுகளுக்கு சலுகைகள் கொடுக்கப்படும்.

ஏர்டெல் இன்ஃபினிட்டி ஃபேமிலி திட்டம் ரூ.699 விவரங்கள் (Airtel Infinity Family Plan Rs 699 Details): மாதாந்திர பில் சைக்கிளை கொண்ட இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும். இந்த விலைக்கு 2 சிம் கார்டுகளுக்கு சலுகைகளை பெற்று கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கொடுக்கப்பட்டு உள்ளது.

Airtel போட்ட போடு.. இனி 2 சிம் கார்டுக்கு 1 ரீசார்ஜ்.. வாய்ஸ் கால்கள்!

இதில் லோக்கல் & எஸ்டிடி ரோமிங் (Local & STD Roaming) கால்கள் கொடுக்கப்படும். மொத்தமாக 105 ஜிபி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். இதில் 75 ஜிபி டேட்டா பிரைமரி சிம் கார்டுக்கும் 30 ஜிபி டேட்டா கூடுதலாக இணைக்கப்படும் சிம் கார்டுக்கும் கிடைக்கிறது. 100 எஸ்எம்எஸ்களை போஸ்ட்பெய்ட் கஸ்டமர்கள் நாளொன்றுக்கு அனுப்பி கொள்ளலாம்.

மேலும், கூடுதலாக ஓடிடி சலுகைகள் மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் சலுகைகளும் கிடைக்கின்றன. ஆகவே, அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா கிடைக்கிறது. இதை 6 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படும். இந்த சந்தாவை 1 வருடங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த ஓடிடிகள் போல ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தாவை இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. இதில் 10+ ஓடிடி ஆப்கள் கிடைக்கும். ஆகவே, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே ஆப் வழியாக சோனிலிவ் (SonyLiv) உள்ளிட்ட 10+ ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். கூகுள் ஒன் ஸ்டோரேஜ் (Google One Storage) சலுகை கிடைக்கிறது.

இதில் 100 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். மேலும், ஃபிராடு டிடெக்சன் (Fraud Detection) மற்றும் ஸ்பேம் அலெர்ட்கள் (Spam Alerts) சலுகைகளை கொடுத்து உள்ளது. ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) மற்றும் ப்ளூ ரிப்பன் பேக் (Blue Ribbon Bag) சலுகைகளையும் இந்த ஏர்டெல் இன்ஃபினிட்டி ஃபேமிலி திட்டம் கொடுத்து உள்ளது. ஒரே சிம் கார்டுக்கு மற்றொரு திட்டம் உள்ளது.

ஏர்டெல் இன்ஃபினிட்டி ஃபேமிலி திட்டம் ரூ.549 விவரங்கள் (Airtel Infinity Family Plan Rs 549 Details): 1 சிம் கார்டுக்கு மட்டுமே இந்த திட்டத்தில் சலுகைகள் கிடைக்கும். ஜிஎஸ்டி கட்டணம் கூடுதலாக இருக்கும். இதிலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகைகள் கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது.

75 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே இருக்கின்றன. ஆகவே, அமேசான் பிரைம் வீடியோ சந்தாவை 6 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை 1 வருடத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் கிடைக்கிறது.

மேலும், கூகுள் ஒன் சந்தா வழியாக 100 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைத்துள்ளது. ஃபிராடு டிடெக்சன் மற்றும் ஸ்பேம் அலெர்ட் சலுகைகளை கொடுத்துள்ளது. ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகையும் இதில் கிடைக்கிறது. இந்த சலுகைகள் முந்தைய திட்டத்தில் கூடுதல் சிம் கார்டுகளுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளாக இருக்கிறது. ஆனால், அதைவிட கூடுதல் விலைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Infinity Family Plan Rs 699 Offer Local STD Roaming Calls 105 GB Data For 2 SIM Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X