Home
News

ஜியோவே திக்குமுக்காடுது.. ரூ.299 போதும்.. 200GB டேட்டா.. 3 ஓடிடி சந்தா.. வாய்ஸ் கால்.. 4 சிம் கனெக்சன் வேற!

ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ஒரேவொரு போஸ்ட்பெய்ட் திட்டத்தின் மூலம் 320 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் போன்ற பல்வேறு சலுகைகளை 5 சிம் கார்டுகளில் பயன்படுத்திக் கொள்ள முடியுமென்றால் உங்களால் நம்ம முடிகிறதா?

இப்போதெல்லாம், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) என்று எந்த டெலிகாம் நிறுவனங்களின் பிளான்களை எடுத்துக்கொண்டாலும், ஒரு மாதத்துக்கு குறைந்தது ரூ.300 செலவாகிறது. இந்த திட்டங்களிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளை தவிர வேறு பலன்களை எதிர்பார்க்க முடியாது.

ரூ.299 போதும்.. 30GB டேட்டா.. 3 ஓடிடி சந்தா.. 4 சிம் கனெக்சன் வேற!

ஆனால், ஏர்டெல் நிறுவனம் ஒரோவொரு போஸ்ட்பெய்ட் திட்டம் மூலம் வெறும் ரூ.299 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், மூன்று முக்கிய ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன், ஏர்டெல் தேங்க்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கி மூக்கில் விரல் வைக்கும்படி செய்திருக்கிறது.

இந்த திட்டம் ரூ.1,499 மதிப்பு கொண்டதாகும். இந்த விலை உங்களுக்கு அதிகமாக இருப்பதுபோல தோன்றாலாம், ஆனால், 5 சிம் கார்டுகளுக்கு கனெக்ஷன் கிடைப்பதால், ஒரு குடும்பம் முழுக்க அதிகப்படியான சலுகைகளை பெற முடியும். ஒருவருக்கு ரூ.299 மட்டுமே செலவாகும். இந்த திட்டத்தில் என்னென்ன சலுகைகள் இருக்கின்றன? எவ்வளவு நாள் வேலிடிட்டி கிடைக்கும்? உள்ளிட்ட முழு விவரங்கள் பின்வருமாறு.

ஏர்டெல் ரூ.1,499 பிளான் விவரங்கள் (Airtel Rs 1499 Plan Details): இதுவொரு போஸ்ட்பெய்ட் திட்டமாகும். ஒரு பிரைமரி போஸ்பெய்ட் சிம் கார்டில் ரூ.1,499 ரீசார்ஜ் செய்தால், அதோடு கூடுதலாக 4 சிம் கார்டுகளை இணைந்து கொள்ளலாம். இந்த சிம் கார்டுகளுக்கும் திட்டத்தின் சலுகைகள் வழங்கப்படும். அந்த வகையில், மொத்தமாக 5 சிம்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை கிடைக்கும்.

இந்த பிளானில், மொத்தமாக 320 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். அதில் 200 ஜிபி டேட்டாவை பிரைமரி சிம் கார்டிலும், தலா 30 ஜிபி டேட்டாவை, இணைக்கப்பட்ட சிம் கார்டுகளிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒவ்வொரு சிம் கார்டுக்கும் 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கும். இதில் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் ஆகியவை அடங்கும்.

இந்த பிளானுக்கு ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) சலுகைகளும் பொருந்தும். ஆகவே, ஓடிடி, ஹெல்த், டிராவல் போன்றவற்றுக்கு 5 பேரும் பயனடையலாம். அதாவது, இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால், ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படும். அதேபோல, ஒரு மாதத்துக்கான நெட்பிளிக்ஸ் (Netflix) ஸ்டாண்டர்ட் சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் 6 மாதத்துக்கான அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும்.

இதில் கூடுதலாக ரூ.150 செலுத்தினால், நெட்பிளிக்ஸ் தளத்தின் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சனை பெற்றுக் கொள்ள முடியும். மேலும், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே மொபைல் பேக் (Airtel Xstream Play Mobile Pack), ஏர்டெல் விங்க் மியூசிக் (Airtel Wynk Music) ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், ஏர்டெல் தேங்க்ஸ் சலுகையின் கீழ் வரும் ஏர்டெல் விஐபி சர்வீஸ் (Airtel VIP Service) பலன்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

ஏர்டெல் ஸ்டோர்கள் (Airtel Stores) மற்றும் ஏர்டல் கஸ்டமர் கேர் சென்டர்களில் (Airtel Customer Care Centres) முன்னுரிமை அளிக்கப்படும். அதோடு ப்ளூ ரிப்பன் பேக் சர்வீஸ் (Blue Ribbon Bag Service) பெற்றுக் கொள்ளலாம். 1 வருடத்துக்கான அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) மெம்பர்ஷிப் கிடைக்கும். இதுபோன்ற பல்வேறு அம்சங்களை கூடுதல் செலவில்லாமல், ஒரே போஸ்ட்பெய்ட் பிளான் மூலம் 5 சிம் கார்டுகளில் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதுவொரு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Infinity Family 1499 Plan With 320GB Data, Unlimited calls, 4 SIM Connections, OTT Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X