Airtel கஸ்டமர்கள் ஷாக்.. 2 முக்கிய ரீசார்ஜ் திட்டங்கள் மீது திடீர் விலை உயர்வு.. என்ன பிளான்கள்? இனி எவ்வளவு?
ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் 2 ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகளை திடீரென உயர்த்தியுள்ளது. "விலை உயர்வை முன்னெடுக்க ஏர்டெல் நிறுவனம் தயங்காது!" என்று சுனில் பார்தி மிட்டல் கூறிய ஒரு சில தினங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
எந்தெந்த ஏர்டெல் திட்டங்கள் விலை உயர்வை பெற்றுள்ளன? ஏர்டெல் ரூ.118 மற்றும் ரூ.289 திட்டங்களின் விலைகள் உயர்த்தபட்டுள்ளது. முன்னதாக ரூ.118 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் இனிமேல் ரூ.129 க்கும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இதே போல ரூ.289 திட்டமானது இனிமேல் ரூ.329 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.

இவ்விரு ஏர்டெல் திட்டங்களின் புதிய விலை நிர்ணயங்களும் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டன (அதாவது இனிமேல் பழைய விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்காது) மேலும் ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் (Airtel Official Website), ஏர்டெல் மொபைல் ஆப்பிலும் (Airtel Mobile App) புதிய விலைகள் பிரதிபலிக்கின்றன.
(பழைய விலை ரூ.118) புதிய ஏர்டெல் ரூ 129 திட்டத்தின் கீழ் என்ன நன்மைகள் கிடைக்கும்? டெய்லி டேட்டா லிமிட்டை (Daily Data Limit) மீறிய அல்லது கூடுதல் டேட்டா (Extra Data) தேவை உள்ள ஏர்டெல் கஸ்டமர்களின் முதன்மை விருப்பம் என்றால் அது ரூ.118 தான் (இனிமேல் இதன் விலை ரூ.129 இதுவொரு டேட்டா வவுச்சர் (Data Voucher) ஆகும். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 12ஜிபி டேட்டா கிடைக்கும்.
இந்த 12ஜிபி டேட்டாவை பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்த திட்டத்திற்கென பிரத்யேக வேலிடிட்டி எதுவும் கிடையாது. இது உங்களுடைய பேஸிக் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி (Basic Prepaid Plan Validity) உடன் ஒற்றுப்போகும்.
டேட்டா நன்மையை தவிர்த்து இந்த திட்டத்தில் வேறு எந்த நன்மையும் இல்லை. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.118 இல் இருந்து ரூ.129 க்கு விலை மாறியதன் விளைவாக, இந்தத் திட்டத்தின் கீழ் கிடைத்த ஒவ்வொரு ஜிபி டேட்டாவின் விலையும் ரூ.9.83 இல் இருந்து ரூ.10.75 ஆக உயர்ந்துள்ளது.
(பழைய விலை ரூ.289) புதிய ஏர்டெல் ரூ 329 திட்டத்தின் கீழ் என்ன நன்மைகள் கிடைக்கும்? மலிவான விலைக்கு 28 நாட்களுக்கும் மேலான வேலிடிட்டியை தேடும் ஏர்டெல் பயனர்களின் பிரதான விருப்பம் ரூ.289 தான் (இனிமேல் இதன் விலை ரூ.329). இது சற்றே வித்தியாசமாக 35 நாட்கள் என்கிற வேலிடிட்டியை (35 Days Validity) வழங்கும் ஒரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஆகும்.
இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 4ஜிபி டேட்டா கிடைக்கும். கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் 300 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை அப்பல்லோ 24/7 சர்க்கிள் சந்தா (Apollo 24|7 Circle subscription), இலவச ஹலோ ட்யூன்ஸ் (Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) உள்ளிட்ட ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகள் (Airtel Thanks Benefits) கிடைக்கும்.
திடீர் விலை மாற்றத்தால், இந்தத் திட்டத்தின் கீழ் கிடைத்த ஒவ்வொரு ஜிபி டேட்டாவின் விலையும் ரூ.8.25 இல் இருந்து ரூ.9.4 ஆக உயர்ந்துள்ளது. விலை உயர்வை சந்தித்த பின்னரும் கூட, இந்த திட்டம் நீடித்த வேலிடிட்டியை விரும்பிய மற்றும் அதிக டேட்டா தேவை இல்லாத ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாகும்.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையானது ஏஆர்பியு (ARPU) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (average revenue per user) அதிகரிக்கவும், ஒட்டுமொத்த முதலீடுகளில் சிறந்த வருவாயை (better return on investments) பெற உதவும் நோக்கத்தின் கீழ் நிகழ்த்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








