Airtel பயனர்கள் தலையில் விழுந்த இடி! திடீர் விலை உயர்வு.! இனி ரீசார்ஜ் செய்ய அதிக காசு செலவிட வேண்டுமா?
ஏர்டெல் (Airtel) நிறுவனம், அதன் பேசிக் ப்ரீபெய்ட் பிளான் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. இப்போது, ஏர்டெல்லின் அடிப்படை திட்டம் ரூ.155 முதல் துவங்குகிறது. ஏன், இந்த திடீர் விலை ஏற்றம்? எந்த வட்டங்களில் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று பார்க்கலாமா?
ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (ARPU) அதிகரிப்பதற்காக, ஏர்டெல் இறுதியாக அனைத்து 22 வட்டங்களிலும் கட்டணங்களை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது ரூ.99 திட்டம் ஏர்டெல் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இனி வாடிக்கையாளர்கள் அடிப்படை திட்டத்தை தேர்வு செய்ய விரும்பினால், வழக்கத்திற்கு மாறாக அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்பதே இதன் பொருள்.

இனி ஏர்டெல் பயனர்கள், நுழைவு நிலை திட்டத்திற்கு ரூ.155 செலுத்த வேண்டும். இது ரூ.99 திட்டத்தை விட 56 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. Airtel கடந்த ஆண்டு டிசம்பரில் ரூ.193 ARPU என அறிவித்தது, இந்த 56 சதவீத அதிகரிப்பு இந்த நிதியாண்டின் Q4-ல் 3 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் ஒடிசா மற்றும் ஹரியானாவில் கட்டண உயர்வு தொடங்கியது.
அடுத்த ஐந்து மாதங்களுக்குள் இந்த திட்டம் நாட்டின் அனைத்து வட்டங்களிலிருந்தும் அகற்றப்பட்டது. புதிய அடிப்படைத் திட்டம் 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மை மற்றும் 300 SMS நன்மைகளை 24 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. கூடுதலாக, இந்த திட்டம் இலவச Wynk மியூசிக் மற்றும் Hellotunes போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.
முன்னதாக, பயனர்களுக்கு கிடைத்த அடிப்படை திட்டமான ரூ.99 திட்டம், அதன் பயனர்களுக்கு 200 எம்பி டேட்டாவையும், நிமிடத்திற்கு ரூ.2.5 பைசாவையும், 300 SMS-களையும் 24 வேலிடிட்டி உடன் வழங்கியது. ரூ.99 மலிவானது மற்றும் ரூ.155 திட்டத்தை விட அதிக செல்லுபடியை வழங்கப் பயன்படுத்தப்பட்டது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. இருப்பினும், நீங்கள் ஏர்டெல் சிம்மை இரண்டாம் நிலை சிம்மாகப் பயன்படுத்தினால், ரூ.99 திட்டத்தை விட இது விலை உயர்ந்ததாகவுள்ளது.

கூடுதலாக, நீங்கள் சிம்மை செயல்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்பினால், இந்த ரூ.155 திட்டம் விலை அதிகமாக இருக்கும். ஏர்டெல் தவிர மற்ற இரண்டு முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களும் ARPU-ஐ அதிகரிக்க விரும்புகின்றனர். இதனால், ப்ரீபெய்ட் பிரிவில் கட்டணங்களை உயர்த்த மற்ற நிறுவனங்களும் திட்டங்களைத் தீட்டி வருகின்றன என்பதே உண்மையாகும். இருப்பினும், ஏர்டெல் மட்டுமே கட்டணங்களை அதிகரித்து வருகிறது.
இதே நேரத்தில், ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதேபோல், வோடபோன்-ஐடியா தனது ப்ரீபெய்ட் பிரிவில் அமைதியாக மாற்றங்களைச் செய்து வருகிறது. Vi ரூ.289 மற்றும் ரூ.429 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை இரண்டும் Vi இன் புதிய திட்டங்களாகும்.
மறுபுறம், ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 ஜியோ பிளஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ பிளஸ் திட்டம் மார்ச் 22 முதல் கிடைக்கும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு இலவச சேவைகளையும் ரூ. 99க்கு கூடுதல் கட்டணத்துடன் 3 இணைப்பு சிம்களை ஒரே திட்டத்தில் இணைய அனுமதிக்கிறது. இந்த திட்டம் ஒரு போஸ்ட்பெய்ட் திட்டமாகும்.


Click it and Unblock the Notifications








