சத்தமின்றி கட்டணத்தை உயர்த்தி வேலையைக் காட்டிய Airtel.! என்னம்மா இப்படி பண்றீங்களே?

|

இந்த ஆண்டு ஜியோ நிறுவனம் தான் முதலில் கட்டண உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஏர்டெல் நிறுவனம் முந்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

57 சதவீதம்...

57 சதவீதம்...

bgr தகவலின்படி, ஹரியானா மற்றும் ஒடிசாவில் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தை நிறுத்திவிட்டு, அதற்குப்பதிலாக ரூ.155 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாகச் சத்தமில்லாமல் 57 சதவீதம் விலையை அதிகரித்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.

இந்தியால அடுத்த மலிவு விலை 5G ஸ்மார்ட்போன் இது தான்.! இந்த Infinix போன் விற்பனை பிச்சுக்க போகுது.!இந்தியால அடுத்த மலிவு விலை 5G ஸ்மார்ட்போன் இது தான்.! இந்த Infinix போன் விற்பனை பிச்சுக்க போகுது.!

99 டாக் டைம்

குறிப்பாக ரூ.99 ரீசார்ஜ் திட்டம் ஆனது 99 டாக் டைம், 28 நாட்கள் வேலிடிட்டி, 200 எம்பி டேட்டாவையும் வழங்கி கொண்டிருந்தது. தற்போது இந்த திட்டம் நீக்கப்பட்டு அதற்குப்பதிலாக ரூ.155 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

TV, Fridgeனு எதையும் வாங்காதீங்க: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உடைத்த உண்மை! என்ன தெரியுமா?TV, Fridgeனு எதையும் வாங்காதீங்க: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உடைத்த உண்மை! என்ன தெரியுமா?

 கட்டண உயர்வு

கட்டண உயர்வு

அதன்படி ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த புதிய திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு குறிப்பிட்டபடி தற்போது ஹரியானா மற்றும் ஒடிசாவில்மட்டும் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் இந்நிறுவனம் கட்டண உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாராச்சும் சொன்னா தானே தெரியும்! பெரும்பாலான SBI பயனர்களுக்கு தெரியாத ஒரு சீக்ரெட் சர்வீஸ்! என்னது அது?யாராச்சும் சொன்னா தானே தெரியும்! பெரும்பாலான SBI பயனர்களுக்கு தெரியாத ஒரு சீக்ரெட் சர்வீஸ்! என்னது அது?

4ஜி பதிவிறக்கம்

அதேபோல் சமீபத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் வெளியிட்ட தகவல் என்னவென்றால், 4ஜி பதிவிறக்கம், பதிவேற்றம் ஆகிய இரண்டின் சராசரி வேகத்திலுமே கடந்த அக்டோபர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

அவசரப்பட்டியே குமார்! ரூ.15,000 இருந்தாலே சிறந்த 5G போன் வாங்கி இருக்கலாம்: நீங்க மிஸ் பண்ணாதீங்க!அவசரப்பட்டியே குமார்! ரூ.15,000 இருந்தாலே சிறந்த 5G போன் வாங்கி இருக்கலாம்: நீங்க மிஸ் பண்ணாதீங்க!

இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது ஏர்டெல்

இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது ஏர்டெல்

கடந்த மாதத்தில் ஜியோ நிறுவனம் விநாடிக்குச் சராசரியாக 20.3 எம்பிபிஎஸ் என்ற வேகத்தைப் பதிவு செய்தது. இதன் மூலம் பதிவிறக்க வேகத்தில் தனது முன்னிலையை ஜியோ நிறுவனம் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேசமயம் பதிவிறக்க வேகத்தில் 15எம்பிபிஎஸ் வேகத்துடன் ஏர்டெல் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் 4.5எம்பிபிஎஸ் சராசரி பதிவிறக்க வேகத்துடன் வோடபோன் ஐடியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. Jio-வை கழுவி ஊற்றும் கால்பந்தாட்ட ரசிகர்கள்! ஏன்?இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. Jio-வை கழுவி ஊற்றும் கால்பந்தாட்ட ரசிகர்கள்! ஏன்?

ஜியோ நிறுவனம் மட்டுமே முன்னிலை..

ஜியோ நிறுவனம் மட்டுமே முன்னிலை..

பதிவேற்ற வேகத்தை பொருத்தவரை ஜியோ சற்று பின்தங்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது கடந்த செப்டம்பர் மாதம் ஜியோவின் பதிவேற்ற வேகம் 6.4எம்பிபிஎஸ் ஆக இருந்தது, அக்டோபரில் 6.2எம்பிபிஎஸ் ஆகக் குறைந்துவிட்டது. இருந்தபோதிலும் இந்தப் பிரிவில் ஜியோ நிறுவனம் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

இதுதான் ஆபர்: 43-இன்ச் OnePlus டிவியை இதை விட கம்மி விலையில் வாங்க முடியாது.! பிளிப்கார்ட் அதிரடி.!இதுதான் ஆபர்: 43-இன்ச் OnePlus டிவியை இதை விட கம்மி விலையில் வாங்க முடியாது.! பிளிப்கார்ட் அதிரடி.!

வோடபோன் ஐடியா

குறிப்பாக பதிவேற்ற வேகத்தில் ஜியோவுக்கு அடுத்தபடியாக வோடபோன் ஐடியா சாரசரியாக 4.5 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தைப் பதிவு செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதன்பின்பு ஏர்டெல் நிறுவனம் சராசரியாக 2.7 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தைப் பதிவு செய்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Airtel hikes minimum monthly recharge plan price by 57% to Rs 155 in 2 circles: Full Details!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X