அள்ளி தந்த ஏர்டெல்.. கம்மி பட்ஜெட்ல தினமும் 3ஜிபி டேட்டா.. அமேசான் பிரைம்.. வாய்ஸ் கால்கள்..
ஜியோ நிறுவனத்துக்கு போட்டியாக ஏர்டெல் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் கம்மி விலையில் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Airtel Rs 699 Recharge Plan) தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே பயனர்கள் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம்.
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சந்தாவும் வழங்குகிறது இந்த ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு அன்லிமிடெட் 5ஜி (unlimited 5G data), ப்ரீ ஹாலோ டியூன்ஸ் ( free Hello Tunes), விங்க் மியூசிக் (Wynk Music), அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24/7 Circle) மெம்பர்ஷிப் உள்ளிட்ட உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Airtel Rs 999 plan) தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதேபோல் இதில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்த்தில் கிடைக்கும்.
குறிப்பாக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) ஓடிடி தளங்களின் இலவச சந்தா கொடுக்கிறது ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். அதாவது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே கீழ் சோனிலிவ் (SonyLiv), லையன்ஸ்கேட்பிளே (LionsgatePlay), ஈராஸ்நவ் (ErosNow), மனோரமா மேக்ஸ் (ManoramaMAX), ஷீமரூமி (Shemaroome), நம்மபிளிக்ஸ் (Nammaflix) டிவோ (Divo), அல்ட்ரா (Ultra), க்ளிக் (Klikk) மற்றும் ஹங்கமா பிளே உள்ளிட்ட 15 ஓடிடி தளங்களில் இலவச சந்தா வழங்கப்படுகிறது.

மேலும் ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.RewardsMini சந்தா, அப்பல்லோ 24/7 சர்க்கிள், இலவச ஹெலோட்யூன்ஸ், விங்க் மியூசிக், அன்லிமிடெட் 5ஜி டேட்டா உள்ளிட்ட பல சிறப்பான சலுகைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் நெட்பிளிக்ஸ் சந்தா தரும் ஒரு அசத்தலான திட்டம் கூட வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.
அதன்படி ஏர்டெல் நிறுவனமும் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் இலவசமாக நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தாவை வழங்குகிறது. பின்பு இந்த ஏர்டெல் திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா, விங்க் மியூசிக் (Wynk Music) சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle)போன்ற பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் 84 நாள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications