Home
News

Jio-வை ஓவர்டேக் செய்த Airtel.! கம்மி காசில் OTT நன்மையுடன் அன்லிமிடெட் 5G டேட்டா ஃப்ரீ! எந்த பிளான்?

ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 5ஜி டேட்டாவை வழங்கி அசத்தியது. இதை மிஞ்சும் அளவிற்கு ஏர்டெல் நிறுவனம் இப்போது இலவச OTT நன்மையுடன், இலவச 5ஜி டேட்டாவை அன்லிமிடெட்டாக வழங்குகிறது. இதை எப்படி பெறுவது? எந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பதென்று பார்க்கலாமா? வாங்க.

பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு இப்போது அன்லிமிடெட் 5G டேட்டா சலுகையை கிடைக்கச் செய்துள்ளது. ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) நெட்வொர்க் பகுதியில் வசிக்கும், 5ஜி ஆதரவு கொண்ட ஏர்டெல் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வேகமான 5ஜி டேட்டா இலவசமாக அணுகக் கிடைக்கிறது. இந்தச் சலுகை பெற ரூ.239 மற்றும் அதற்கு மேல் உள்ள திட்டங்களை நீங்கள் ரீசார்ஜ் செய்தால் போதும்.

Jio-வை ஓவர்டேக் செய்த Airtel.! கம்மி காசில் OTT, இலவச 5G டேட்டா!

இது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு ஆகிய இரண்டு மொபைல் இணைப்புகளைக் கொண்ட அனைவருக்கும் பொருந்தும் என்பது கவனிக்கத்தக்கது. ஜியோவை மிஞ்சும் அளவிற்கு ஏர்டெல் இப்போது அதன் பயனர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மையுடன், அன்லிமிடெட் 5G டேட்டா சலுகைக்கு கூடுதலாக சேர்த்துக் குறைந்த விலையில் வழங்குகிறது. இந்த நன்மையைப் பெற நீங்கள் எந்த திட்டங்களைத் தேர்வு செய்யலாம் என்ற விபரம் கீழே உள்ளது.

IPL 2023 போட்டிகள் துவங்கும் நேரம் நெருங்கிவிட்டதனால், மக்கள் Dinsey+ Hotstar சந்தாவுடன் ரீசார்ஜ் திட்டங்களைத் தேடி வருகிறார்கள். இத்தகைய திட்டங்களைத் தேடும் வாடிக்கையாளர்களின் நீங்களும் ஒருவர் என்றால், இந்த ரீசார்ஜ் திட்டங்களை பார்வையிடுங்கள். இந்த திட்டங்கள் உங்களுக்கு இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் OTT சந்தாவுடன், இலவச 5ஜி அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி SMS நன்மையையும் வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.399 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத இலவச சந்தாவை வழங்குகிறது. இத்துடன் வரம்பற்ற அழைப்பு நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 2.5 ஜிபி தினசரி டேட்டா நன்மை கிடைக்கிறது. இந்தத் திட்டம் அப்பல்லோ 24|7 சர்க்கிள் சந்தா போன்ற கூடுதல் நன்மைகளுடன் வருகிறது. இது அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது.

Jio-வை ஓவர்டேக் செய்த Airtel.! கம்மி காசில் OTT, இலவச 5G டேட்டா!

ஏர்டெல் ரூ.499 திட்டம் 28 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் தினசரி 3 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இத்துடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத இலவச சந்தா மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் போன்ற கூடுதல் பலன்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இத்துடன் இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.839 திட்டம் 84 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி தினசரி டேட்டா நன்மைகளுடன் வருகிறது. இது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத இலவச சந்தாவை வழங்குகிறது. இத்துடன் ஏர்டெல் தேங்க்ஸ் இலவச நன்மைகளும் கிடைக்கிறது. கூடுதலாக, அன்லிமிடெட் இலவச 5ஜி டேட்டா நன்மையையும் கிடைக்கிறது.

இந்த திட்டங்கள் அனைத்தும், உங்களுக்கு தேவையான ஒட்டுமொத்த நன்மைகளையும் ஒரே பேக்கில் வழங்குகிறது. அன்லிமிடெட் அழைப்பு, தினசரி எஸ்எம்எஸ், தினசரி டேட்டா, OTT சந்தா, இதர இலவச நன்மைகள் மற்றும் இறுதியாக நிறுவனம் வழங்கும் இலவச 5ஜி அன்லிமிடெட் டேட்டா நன்மை என்று உங்களை இந்த திட்டங்கள் திணறடிக்கும் அளவிற்கான நன்மைகளை கொண்டுள்ளன. நீங்கள் விரும்பும் திட்டத்தை ரீசார்ஜ் செய்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Has Overtaken Jio With Its Budget Friendly plan Provides Disney Hotstar and Unlimited 5G Free Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X