தம்பி ஜியோ கொஞ்சம் ஓரமா போ.. வெறும் ரூ.9 போதும்.. 10ஜிபி டேட்டா வழங்கிய Airtel.. வேலிடிட்டி?
ஜியோ நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஏர்டெல். குறிப்பாக ஏர்டெல் (Airtel) நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல்.
ஏர்டெல் ரூ.9 ப்ரீபெய்ட் திட்டத்தை (Airtel Rs 9 Plan) தான் தற்போது அறிமுகம் செய்துள்ளது . ஏர்டெல் நிறுவனம். அதாவது இது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். இந்த திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் 10ஜிபி வரை டேட்டா கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 மணி நேரம் மட்டும் தான். மேலும் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக டேட்டா தேவைப்படும் நபர்கள் இந்த ஏர்டெல் ரூ.9 திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. குறிப்பாக இந்த திட்டம் இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் ரீசார்ஜ் செய்யக் கிடைக்கிறது. மேலும் ஏர்டெல் நிறுவனம் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெயட் திட்டம் (airtel rs 3359 plan) தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 912.5ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம்.
அதேபோல் ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெயட் திட்டம் ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (disney+ hotstar mobile) சப்ஸ்கிரிப்ஷனை வழங்குகிறது . பின்பு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) மெம்பர்ஷிப் உள்ளிட்ட அசத்தலான சலுகைகள் வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 2999 Plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது.
இந்த ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் உள்ளன. இதுதவிர அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மெம்பர்ஷிப், விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோ டியூன்ஸ் (Free Hellotunes), அன்லிமிடெட் 5ஜி உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஏர்டெல் திட்டம்.

ஏர்டெல்ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1799 Recharge Plan) MdJ 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. ஆனால் இந்த திட்டம் வெறும் 24ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கும். இதுவொரு லம்ப்-சம் டேட்டா(Lump Sum Data) சலுகையாகும். ஆகவே, வேலிடிட்டி நாட்களில் எப்போதும் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குறிப்பாக ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 3600எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும். இதுதவிர அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle), ப்ரீ-ஹலோ டியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications