ஒரே பிளான்.. ஒரு வருடத்திற்கு கவலை இல்லை.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. அசத்தும் Airtel..
ஜியோ, வோடபோன் நிறுவனங்களுக்குப் போட்டியாக அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக ஏர்டெல் கொண்டு வரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் விரைவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன.
அதாவது சமீபத்தில் தான இந்த இரண்டு டெலிகாம் நிறுவனங்களும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்த உள்ளதாகத் தகவல் வெளியானது. எனவே ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்கள் நீண்ட நாள் வேலிடிட்டி தரும் ஒரு ப்ரீபெய்ட் திட்டங்களில் இப்போதே ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்வது நல்லது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஒரு வருடம் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3359 ப்ரீபெயட் திட்டம் (airtel rs 3359 plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 912.5ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம்.
குறிப்பாக ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெயட் திட்டம் ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (disney+ hotstar mobile) சப்ஸ்கிரிப்ஷனை வழங்குகிறது . பின்பு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) மெம்பர்ஷிப் உள்ளிட்ட அசத்தலான சலுகைகள் வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Airtel Rs 2999 Plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு இந்த ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் உள்ளன. இதுதவிர அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மெம்பர்ஷிப், விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோ டியூன்ஸ் (Free Hellotunes), அன்லிமிடெட் 5ஜி உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஏர்டெல் திட்டம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1799 Recharge Plan) 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. ஆனால் இந்த திட்டம் வெறும் 24ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கும். இதுவொரு லம்ப்-சம் டேட்டா(Lump Sum Data) சலுகையாகும். ஆகவே, வேலிடிட்டி நாட்களில் எப்போதும் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் வவரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 3600எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும். இதுதவிர அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle), ப்ரீ-ஹலோ டியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அழைப்பு நன்மைகளை மட்டும் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது மிகவும் நல்லது.
விரைவில் ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களை விலையை உயர்த்தும் என்பதால் இப்போதே இந்த அதிக வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது. அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications