ஏர்டெல் ரூ.249 மற்றும் ரூ.129 திட்டங்களில் தரமான சலுகை அறிவிப்பு.!
இதற்கு முன்பு ஏர்டெல் அறிமுகம் செய்த ரூ.299-திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் 2.5ஜிபி டேட்டா தினமும் பெற்றுக் கொள்ளலாம்.
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி கடற்த வாரம் ரூ.299 பிரீபெய்ட் திட்டத்தில் குறிப்பிட்ட சலுகையுடன் அமேசான் பிரைம் சந்தா வழங்கும்
சலுகையும் அறிவித்தது ஏர்டெல். தற்சமயம் ரூ.129 மற்றும் ரூ.249 திட்டங்களில் அட்டகாசமான சலுகையை அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக ரூ.249 திட்டத்தில் சலுகையுடன் பயனர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள உயிர் காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது. பின்பு ஏர்டெல் ரூ.249 திட்டத்தில் வழங்கப்பட்ட சலுகை என்னவென்றால், தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100எஸ்எம்எஸ், உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ஜீ5 நேரலை சேனல்கள்
மேலும் இதனுடன் தனியார் வங்கி நிறுவனம் சார்பில் ரூ.4 லட்சத்திற்கான உயிர்காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது, பின்பு ஏர்டெல் டிவி பிரீமியம் சேவையும் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஜீ5 நேரலை சேனல்கள், திரைப்படங்களை பார்க்கும் வசதியும் ஒரு வருடத்திற்கான நார்டான் மொபைல் பாதுகாப்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் செயலி
வாடிக்கையாளர்கள் ரூ.249 திட்டத்தை தேர்வு செய்யும் போது காப்பீடு திட்டத்திற்கு தேவையான ஆவணங்களை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம், பின்பு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும், காப்பீடு திட்ட விவரங்களை ஏர்டெல் செயலியில் இருந்து இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி 2ஜிபி டேட்டா
ஏர்டெல் ரூ.129 பிரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ், ஏர்டெல் டிவி மற்றும் வின்க் வியூசிக் சேவைக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சலுகையும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

2.5ஜிபி டேட்டா
மேலும் இதற்கு முன்பு ஏர்டெல் அறிமுகம் செய்த ரூ.299-திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் 2.5ஜிபி டேட்டா தினமும் பெற்றுக் கொள்ளலாம், அதனுடன் அமேசானின் ப்ரைம் மெம்பர்ஷிப் முற்றுலும் இலவசம். குறிப்பாக இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 இலவச எஸ்எம்எஸ் தினசரி வீதம் பயன்படுத்த முடியும்.

இன்ஃபினிட்டி போஸ்ட்பெய்ட்
இன்ஃபினிட்டி போஸ்ட்பெய்ட் மேலும் இது நாள் வரையில் ஏர்டெலின் இன்ஃபினிட்டி போஸ்ட்பெய்ட் ப்ளான்களை பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அமேசான் ப்ரைம் ஆஃபர்களை வழங்கியது. அமேசான் ப்ரைம் ஆஃபரை பயன்படுத்த நீங்கள் ஏர்டெல் தேங்க்ஸ் என்ற ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும். அதன்படி //www.airtel.in ஏர்டெல் தரும் பல சலுகைகளை இந்த இணையத்திற்கு சென்று நீங்கள் நேரடியாக பார்த்தும் தெரிந்தும் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications