Airtel சிம் இருக்கா.. SMS சேவையில் முக்கிய மாற்றம்.. உள்ளே வந்த Google.. இனிமேல்?
இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் ஆபரேட்டர் ஆன பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் ஆனது அதன் எஸ்எம்எஸ் (SMS) சேவைக்கான ஒரு முக்கிய மாற்றத்திற்காக, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் (Google) உடன் கூட்டு சேர்ந்து உள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள ஏர்டெல் பயனர்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதோடு, ஸ்பேம் மற்றும் டிஜிட்டல் மோசடிகளை (Spam and digital fraud) தடுக்கும் நோக்கத்தின் கீழ் பாதுகாப்பான, கேரியர் ஆதரவு (carrier-backed) பெற்ற ரிச் கம்யூனிகேஷன்ஸ் சர்வீசஸ் (Rich Communications Services - RCS) மெசேஜிங் எக்ஸ்பீரியன்ஸை வெளியிடுவதற்காக ஏர்டெல் நிறுவனமும், கூகுள் நிறுவனமும் கூட்டு சேர்ந்துள்ளது.

மார்ச் 01, 2026 தேதியிட்ட அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, இந்த கூட்டணியின் கீழ் ஏர்டெல்லின் நெட்வொர்க் நுண்ணறிவு (Airtel's network intelligence) ஆனது கூகுளின் ஆர்சிஎஸ் (Google RCS) தளம் மற்றும் மேம்பட்ட ஸ்பேம் கண்டறிதல் அமைப்புகளுடன் (Advanced spam detection systems) ஒருங்கிணைக்கப்படும்.
இதன் மூலம் உயர்தர மெசேஜிங் அம்சங்கள் (High-quality messaging features) ஏர்டெல் கஸ்டமர்களுக்கு கிடைக்கும். அந்த அம்சங்களில் - ரிச் மீடியா ஷேரிங் (Rich media sharing) மற்றும் மெசேஜ் ரியாக்ஷன்ஸ் (Message Reactions) போன்ற இன்டராக்டிவ் எலிமெண்ட்ஸ், வலுவான செக்யூரிட்டி சேஃப்கார்ட்ஸ் ஆகியவைகளும் அடங்கும். பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கூகுள் மெசேஜஸ் (Google Messages) மூலம் இந்த சேவை அணுக கிடைக்கும்.
டிஜிட்டல் தொடர்பு சேனல்களில், குறிப்பாக பாரம்பரியமான டெலிகாம் தர மேற்பார்வைக்கு வெளியே செயல்படும் தளங்களில், நிதி மோசடி மற்றும் ஸ்பேம்கள் நாளுக்கு நாள் பெருகி வருவது குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் - ஏர்டெல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெலிகாம் நெட்வொர்க்குகள் ஆனது கடுமையான ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளின் (Regulatory and security frameworks) கீழ் செயல்பட்டாலும் கூட, பல ஓவர்-தி-டாப் (ஓடிடி) மெசேஜிங் தளங்களில் ஒப்பிடக்கூடிய பாதுகாப்புகள் இல்லை. இதன் விளைவாக ஆன்லைன் மோசடி கும்பல்கள், வாடிக்கையாளர்களின் விவரங்கள் திருகின்றன.
கடந்த 18 மாதங்களில் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களில் ஏஐ (AI) அடிப்படையிலான தலையீடுகள் மூலம் ஸ்பேம் மற்றும் மோசடியை சமாளிக்க பல வகையான முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதுவரை 71 பில்லியன் ஸ்பேம் கால்களையும், 2.9 பில்லியன் ஸ்பேம் மெசேஜ் களையும் தடுத்ததாகவும் ஏர்டெல் கூறுகிறது. இதன் மூலம் ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்படும் நிதி இழப்புகளில் 68.7 சதவீதம் சரிவுக்கு வழிவகுத்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், கடந்த 1.5 ஆண்டுகளில், ஏர்டெல் நிறுவனம் ஆனது கால்கள் மற்றும் மெசேஜ்கள் முழுவதும் வாடிக்கையாளர்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்ட தொழில்துறையில் முதன்மையான, ஏஐ அடிப்படையிலான முயற்சிகள் மூலம் இந்தியாவின் ஸ்பேம் மற்றும் டிஜிட்டல் மோசடிக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தியுள்ளதாக ஏர்டெல் குறிப்பிட்டுள்ளது.
மேலும் வாடிக்கையாளர்களை பாதுகாப்பதில் ஒரு சாதனை பதிவை நிரூபிக்கும் வகையில், ஏர்டெல், இன்றுவரை, அதன் அனைத்து புதுமையான ஸ்பேம் எதிர்ப்பு முயற்சிகள் மூலம், 71 பில்லியன் ஸ்பேம் கால்களையும், 2.9 பில்லியன் ஸ்பேம் எஸ்எம்எஸ்களையும் தடுத்துள்ளது, இது அதன் நெட்வொர்க்கில் நிதி இழப்புகளின் மதிப்பில் 68.7 சதவிகிதம் பெரிய குறைப்புக்கு வழிவகுத்தது என்றும் ஏர்டெல் கூறியுள்ளது
கூகுள் உடனான புதிய கூட்டாண்மை, ஆர்சிஎஸ் மெசேஜிங்கிற்கு இணையான டெலிகாம்-கிரேட் ப்ரொடெக்ஷனை நீட்டிக்க முயல்கிறது. இந்த தளம் - தொலைத்தொடர்பு ஆதரவு வணிக அடையாள சரிபார்ப்பை (Telco-backed business identity verification) செயல்படுத்தும், விளம்பர மற்றும் பரிவர்த்தனை மெசேஜ்களை வகைப்படுத்துவதன் மூலம் பயனர்களின் டிஎன்டி (DND - Do Not Disturb) விருப்பங்களை செயல்படுத்தும் என்றும் ஏர்டெல் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் இது ஸ்பேம் தகவல்தொடர்புகளை தடுக்கும், பல அடுக்கு அச்சுறுத்தல் கண்டறிதல் (Multi-layered threat detection) மூலம் தீங்கிழைக்கும் இணைப்புகளை பில்டர் செய்யும். கடைசியாக ஏர்டெல் மற்றும் கூகுளின் கூட்டு ஏஐ அமைப்புகள் ஆனது சந்தேகத்திற்கிடமான அனுப்புநர்களை தடுக்கும் என்றும் ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது .


Click it and Unblock the Notifications