ஜியோவை போல காலர்டியூனை இலவசமாக வழங்கி அதிரவிட்ட ஏர்டெல்.!
மிஸ்டுகால் அலர்ட், காலர் டியூன், இலவச ரோமிங் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வருகின்றது. இதனால் மற்ற நிறுவனங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைந்தனர். இந்
ஜியோவை போலவே தற்போது ஏர்டெல் நிறுவனம் இலவசமாக காலர் டியூனை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனம் இந்திய தொலைத் தொடர்பு துறையில் நுழைந்தது முதல் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. இதனால் குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

மிஸ்டுகால் அலர்ட், காலர் டியூன், இலவச ரோமிங் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வருகின்றது. இதனால் மற்ற நிறுவனங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைந்தனர்.
இந்நிலையில், முன்னணியில் உள்ள ஏர்டெல் நிறுவனம் தற்போது, ஜியோவைபோல காலர் டியூன் வசதியையும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்திய சந்தையில் ஜியோ:
இந்திய சந்தையில் ஜியோ: இந்திய சந்தையில் ஜியோ நிறுவனம் நுழைந்த பிறகு பல்வேறு அதிரடியாக ஆப்பர்களை அறிவித்தது. இதில் இலவச ரோமிங், காலர்டியூன், மிஸ்டு கால் அலர்ட், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றது.
இதனால் குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களையும் ஜியோ நிறுவனம் பெற்றது. மற்ற நிறுவனங்களிலிருந்து ஜியோவுக்கு அதிக வாடிக்கையாளர்களும் சேர்ந்தன. இதனால் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஏர்டெல்லும் காலர் டியூனை அறிவித்தது:
ரூ.126க்கு மேல் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களைப் பயன்படுத்தும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள், இப்போது இலசமாக காலர் டியூனை வைத்துக் கொள்ள முடியும். இதற்கு முன்பு ரூ.36 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
இதை அவர்கள் விங்க் மியுசிக் பயன்பாட்டின் மூலம் பெறலாம்.

40 மில்லியனுக்கு அதிகமான பாடல்:
ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் 40 மில்லியனுக்கும் அதிகமான பாடல்கள் உள்ளன. #AirtelThanks எந்த பிளான்படி ஒரு பகுதியாக இந்த முயற்சி எடுக்கபட்டுள்ளது. இதன் மூலம் நாம் இலவசமாக பாடல்களையும் காலர்டியூனாக செட் செய்து கொள்ள முடியும்.

30 நாளுக்கு பிறகு புதுப்பிக்க வேண்டும்:
ஒரு முறை காலர் டியூனை நாம் செட் செய்து விட்டால், 30 நாட்களுக்கு பிறகு, காலர் டியூனை புதுப்பிக்க வேண்டும் என்று ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் ஹலோ டியூன்ஸ்:
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்கள் காலர் டியூனை செட் செய்ய ஏர்டெல் ஹலோ ட்யூன்ஸ் உதவுகின்றது என ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி சமீர் பாத்ரா ஒரு அறிக்கையில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விங்க் மியூசிக் பட்டியல் ரிங் டோன் செட் செய்ய உதவியாக இருக்கும் இதனால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

15 மொழிகளில் பாடல்கள்:
மியூசிக் பயன்பாட்டில் ஆங்கிலம், இந்தி, பெங்காலி, அசாமி, பஞ்சாமி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம, மராத்தி, குஜராத்தி, ஹரியான்வி, போ%;புரி, ஓரியா, ராஜஸ்தானி உள்ளிட்ட 15 மொழிகளில் பாடல்கள் இருப்பதால், மாநிலங்களிலிருந்தும் பயனர்கள் நன்மைகளை பெற முடியும்.

எவ்வாறு ஹலோ ட்யூனைசெட் செய்து:
> பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து விங்க் மியூசிக் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.
> பயன்பாட்டைத் திறந்து, மேல் வலது மூலையில் உள்ள ‘ஹலோ ட்யூன்ஸ்' ஐகானைக் கிளிக் செய்யவும்.
> நீங்கள் தேடும் பிடித்த பாடலைத் தேடுங்கள்
> இதை உங்கள் ஹலோ ட்யூனாகத் தேர்ந்தெடுக்கவும்
> பயனர்கள் தங்களுக்கு பிடித்த பாடலை இயக்கலாம் மற்றும் மியூசிக் பிளேயரில் உள்ள ஹலோ ட்யூன்ஸ் ஐகானைக் கிளிக் செய்து அதை ஹலோ ட்யூனாக அமைக்கலாம்
> இலவச சந்தாவுடன் தொடர பயனர் ஒவ்வொரு 30 நாட்களுக்கு ஒருமுறை வைக் மியூசிக் பயன்பாட்டில் ஹலோ ட்யூனை உறுதி செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications