Airtel சிம் இருக்கா.. டெய்லி 1GB டேட்டா பத்தலயா.. அப்போ இதை பண்ணுங்க.. 90 நாள் வரை ஜமாய்ங்க!
உங்களிடம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சிம் கார்டு (Airtel SIM Card) உள்ளதா? உங்களுக்கு டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் போதுமானதாக இல்லையா? அதே சமயம் டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்கும் விலை உயர்ந்த திட்டங்களை 56 நாட்கள் - 90 நாட்கள் வரை ரீசார்ஜ் செய்யும் பட்ஜெட் இல்லையா?
மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம் "ஆம்" என்பது தான் உங்களுடைய பதில் என்றால்.. கவலையை விடுங்கள். நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் டெய்லி 1.5 ஜிபி டேட்டாவை வழங்கும் (பின்வரும்) 5 ஏர்டெல்திட்டங்களில் ஏதாவது ஒன்றை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

சிறிது காலத்திற்கு முன்பு வரை டெய்லி 1.5ஜிபி டேட்டாவை வழங்கும் நிறைய திட்டங்கள் ஏர்டெல்லின் கீழ் இருந்தன. ஆனால் இப்போது வெறும் 5 திட்டங்கள் மட்டுமே உள்ளன. இந்த திட்டங்கள் அனைத்தும் நடுத்தர கால சர்வீஸ் வேலிடிட்டி (ServiceValidity) உடன் வருகின்றன
1. பார்தி ஏர்டெல் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs.579 Plan Details): இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய வழக்கமான நன்மைகள் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ-க்கான இலவச சந்தாவை பெறுவார்கள். இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும்.
2. பார்தி ஏர்டெல் ரூ.619 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs.619 Plan Details): இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய வழக்கமான நன்மைகள் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ-க்கான 1 ஆண்டு இலவச சந்தாவை பெறுவார்கள். இந்த திட்டம் 60 நாட்கள் செல்லுபடியாகும்.
3. பார்தி ஏர்டெல் ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs.799 Plan Details): இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய வழக்கமான நன்மைகள் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ-க்கான 1 ஆண்டு இலவச சந்தாவை பெறுவார்கள். இந்த திட்டம் 77 நாட்கள் செல்லுபடியாகும்.
4. பார்தி ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs.859 Plan Details): இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய வழக்கமான நன்மைகள் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ-க்கான 1 ஆண்டு இலவச சந்தா மற்றும் ரிவார்ட்ஸ்மினி சந்தாவை பெறுவார்கள். இந்த திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும்.
5. பார்தி ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs.929 Plan Details): இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய வழக்கமான நன்மைகள் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ-க்கான 1 ஆண்டு இலவச சந்தாவை பெறுவார்கள். இந்த திட்டம் 90 நாட்கள் செல்லுபடியாகும்.


Click it and Unblock the Notifications








