Airtel SIM கஸ்டமர்கள் காட்டில் மழை.. Fully Unlimited ரீசார்ஜ் அறிமுகம்.. நோ லிமிட் 4ஜி, 5ஜி, வாய்ஸ், SMS!
ஏர்டெல் (Airtel) நிறுவனமானது இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொலைத்தொடர்பு வட்டங்களில், ஃபுல்லி அன்லிமிடெட் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்குகளை (Fully Unlimited prepaid recharge packs) அறிமுகப்படுத்தி உள்ளது. என்னென்ன திட்டங்கள்? என்னென்ன நன்மைகள்? எந்தெந்த டெலிகாம் சர்க்கிள்களில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது? இதோ விவரங்கள்:
டெலிகாம்டால்க்கின் சமீபத்திய அறிக்கையின்படி, ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ஃபுல்லி அன்லிமிடெட் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்குகள் ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், டெய்லி லிமிட் இல்லாத அன்லிமிடெட டேட்டா அணுகல் (4ஜி மற்றும் 5ஜி), மற்றும் டிஜிட்டல் சந்தாக்கள் போன்ற ஒருங்கிணைந்த பலன்களை வழங்குகின்றன.

ரூ.399, ரூ.449, ரூ.1,099, மற்றும் ரூ.4,099 என விலையிடப்பட்ட இந்த திட்டங்கள், மாறுபட்ட செல்லுபடியாகும் காலங்கள் மற்றும் கூடுதல் சலுகைகளுடன், குறுகிய கால வேலிடிட்டி மற்றும் நீண்ட கால வேலிடிட்டி தேடும் பயனர்கள் ஆகிய இரண்டு வகையினருக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு உள்ளன.
ஏர்டெல் ரூ.399 ஃபுல்லி அன்லிமிடெட் ரீசார்ஜ் நன்மைகள்: ரூ.399 திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியுடன், வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், தினசரி வரம்புகள் இல்லாத வரம்பற்ற 4ஜி மற்றும் 5ஜி டேட்டா, மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் இது 28 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல், 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம், ஏர்டெல்லின் ஸ்பேம் ப்ரொடெக்ஷன் சேவை மற்றும் இலவச ஹலோடியூன்ஸ் ஆகியவற்றையும் இலவசமாக வழங்கும்.
ஏர்டெல் ரூ.449 ஃபுல்லி அன்லிமிடெட் ரீசார்ஜ் நன்மைகள்: இதுவும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன், வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், தினசரி வரம்புகள் இல்லாத வரம்பற்ற 4ஜி மற்றும் 5ஜி டேட்டா, மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
ஆனால் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (28 நாட்கள்), ஆறு மாதங்களுக்கு ஆப்பிள் மியூசிக் அணுகல், கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ் (30ஜிபி), 20 க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களுக்கான அணுகலுடன் கூடிய 28 நாட்களுக்கான ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம், ஒரு வருடத்திற்கான அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம், ஸ்பேம் அலெர்ட்ஸ் மற்றும் இலவச ஹலோடியூன்ஸ் உள்ளிட்ட பரந்த அளவிலான டிஜிட்டல் சேவைகளை இலவசமாக வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.1099 ஃபுல்லி அன்லிமிடெட் ரீசார்ஜ் நன்மைகள்: இது 84 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இது வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், தினசரி வரம்புகள் இல்லாத வரம்பற்ற 4ஜி மற்றும் 5ஜி டேட்டா, மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. கூடவே இலவச ஹலோடியூன்ஸையும் வழங்குகிறது; இதன்கீழ் ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒரு பாடலை இலவசமாக செட் செய்ய முடியும்.
ஏர்டெல் ரூ. 4,099 ஃபுல்லி அன்லிமிடெட் ரீசார்ஜ் நன்மைகள்: கடைசியாக உள்ளது ரூ.4,099 ஆண்டு திட்டம் ஆகும். இது 365 நாட்கள் செல்லுபடியுடன், வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், தினசரி கட்டுப்பாடுகள் இல்லாத வரம்பற்ற 4ஜி மற்றும் 5ஜி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை வழங்குகிறது. இதோடு இலவச ஹலோடியூன்ஸ் நன்மையும் கிடைக்கும்.
எந்தெந்த சர்க்கிள்களில் இந்த திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன? இந்த திட்டங்கள் தற்போது கேரளா, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் (கிழக்கு மற்றும் மேற்கு), மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. உங்கள் வட்டத்தில் அந்தந்த திட்டங்கள் கிடைக்குமா என்பதை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் சரிபார்க்கவும்.
மேற்கண்ட திட்டங்களில் உள்ள வரம்பற்ற 4ஜி மற்றும் 5ஜி டேட்டா என்பது - தினசரி டேட்டா வரம்புகள் இல்லாமல் பயன்படுத்தலாம் தான், இருப்பினும், 30 நாட்களுக்குள் 300 ஜிபிக்கு மேல் பயன்படுத்துவது வணிக பயன்பாடாகக் கருதப்படலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








