அதிகவேக இண்டெர்நெட் தரும் நெட்வொர்க் இதுதான்.! tutela அறிவிப்பு.!

|

தற்சமயம் tutela வெளிவந்த தகவலின் அடிப்படையில், இந்தியாவில் பதிவிறக்க வேகம் மற்றும் தர நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் டெலிகாம் ஆப்ரேட்டர்கள் மத்தியில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக ஏர்டெல் நிறுவனம்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

புகழ் சேர்த்துள்ளது

புகழ் சேர்த்துள்ளது

மேலும் இந்த அறிக்கையானது தற்சமயம் ஏர்டெல் நிறுவனத்திற்கு மிக விரைவான நெட்வொர்க் அளிக்கும் என்று புகழ் சேர்த்துள்ளது. அதன்படி ஏர்டெல் நிறுவனத்தின் பதிவிறக்க வேகம் 7.4mbps எனவும், வோடபோன் ஐடியா 6.5mbps பதிவிறக்க வேகத்தை அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

மேலும் ஜியோ நிறுவனம் ஆனது தொடர்ந்து 5.3mbps சராசரி பதிவிறக்க வேகத்தைக் கொண்டிருப்பதாகவும் இந்த அறிக்கை
தெரிவிக்கின்றது. மேலும் கால் அழைப்புகளுக்கு இந்த ஜியோ நிறுவனம் கட்டணம் வசூல் செய்வதால் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது.

 10சதவிகிதம் முன்னிலை

10சதவிகிதம் முன்னிலை

குறிப்பாக இரண்டாம் இடம்பெற்றுள்ள வோடபோன் ஐடியா மற்றும் ஜியோ ஆகிய நெட்வொர்க்குகளை விட ஏர்டெல் சிறந்த நிலையான தரம் மற்றும் கிட்டத்தட்ட 10சதவிகிதம் குறிப்பிடத்தக்க முன்னிலை வகிக்கிறது என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

வோடபோன்ஐடியா

வோடபோன்ஐடியா

மேலும் பதிவேற்றத்தை பொறுத்தவரை வோடபோன்ஐடியா 3.7mbps சராசரி பதிவேற்ற வேகத்துடன் பந்தயத்தை வழிநடத்தியது. பின்பு ஏர்டெல் நிறுவனம் 3.5mbps மற்றும் ஜியோ நிறுவனம் 3.2mbps வேகத்துடன் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன்ஐடியா

வரி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சிக்கிய ஏர்டெல், வோடபோன்ஐடியா நிறுவனங்கள் இதுவரையும் சிறந்த சேவையை வழங்கி வருகிறது. ஆனால் ஜியோ நிறுவனமோ சந்தை பங்கு மற்றும் வருவாய் இரண்டிலும் முன்னணி ஆபரேட்டராக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் இணைத்தல் மற்றும் அடுத்த ஆண்டு ஏதேனும் ஒரு கட்டத்தில் 5ஜி நெட்வொர்க்குகள் வருவது ஆகியவற்றுடன் இந்த நிலை சீர்குலைவு, ஒவ்வொரு ஆபரேட்டரும் தற்போதைய மாற்றங்களை மிகச் சிறப்பாகச்
செய்யத் தோன்றுவதால், இது தொழில்துறையில் ஒரு முக்கிய தருணமாக அமையும் என்றும் இந்த tutela அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் சிறப்பான திட்டங்களைப் பற்றி பார்க்கலாம்.

ரூ.148 திட்டம்

முதலில் ரூ.148 திட்டம் குறித்து பார்க்கலாம். இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி நாட்கள் முழுவதும் 2 ஜிபி டேட்டா தான் வழங்கப்படுகிறது.

ரூ. 219 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி

ரூ. 219 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி

219 ரூபாய் திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் 1 ஜிபி தினசரி டேட்டா வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.249 திட்டத்தின் கீழ் அதே 28 நாட்கள் வேலிடிட்டியுடனும் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

ரூ.298 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா

ரூ.298 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா

ரூ.298 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது அதேபோல் இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.398 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கப்படுவதோடு இந்த திட்டத்திற்கு 28 நாட்கள் வேலிடிட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel leads in download speed, quality consistency: Report : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X