சிம்கார்டை ஆக்டிவேட் செய்யத் தவறிய ஏர்டெல்

Posted By: Karthikeyan
சிம்கார்டை ஆக்டிவேட் செய்யத் தவறிய ஏர்டெல்

இந்தியாவில் பரவாலாக மொபைல் சேவையை செய்து வரும் ஏர்டெல் தனது வாடிக்கையாளரின் சிம்கார்டை ஆக்டிவேட் செய்யத் தவறியதால் அதற்கு இழப்பீடாக அந்த வாடிக்கையாளருக்கு ரூ.6000 அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஆஷா சர்மா என்பவர் ஏர்டெல் சேவையைப் பெறவேண்டி ரூ.1000க்கான காசோலையை செலுத்தி ஏர்டெல் சிம்கார்டை வாங்கி இருக்கிறார். ஆனால் ஏர்டெல் அந்த சிம்கார்டை ஆக்டிவேட் செய்யத் தவறிவிட்டது. எனவே தனது சிம்கார்டை ஆக்டிவேட் செய்யுமாறு ஏர்டெல்லை, சர்மா பலமுறை கேட்டிருக்கிறார். ஆனால் ஏர்டெல் அதைச் செய்யத் தவறிவிட்டது.

எனவே வேறு வழியின்றி நீதிமன்றத்தில் ஏர்டெல்லுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றம் அவரது வழக்கை விசாரனைக்கு ஏற்றுக் கொண்டது அவருக்கு சாதகமாகத் தீர்ப்பு அளித்திருக்கிறது.

சிம்கார்டை ஆக்டிவேட் செய்யத் தவறியதற்காக ஏர்டெல் சர்மாவிற்கு இழப்பீடாக ரூ.6000 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. மேலும் சர்மா சிம்கார்டை ஏர்டெல்லிடமே ஒப்படைக்குமாறும் கூறியிருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot