ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர்: ரூ.699 விலை-அன்லிமிடெட் டேட்டா.! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்.!

|

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் என்பது பாரதி ஏர்டெல்லின் புதிய பிராட்பேண்ட் பிராண்ட் அடையாளமாகும், மேலும் ஐஎஸ்பி சில வாரங்களுக்கு முன்பு தனது திட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது ஏர்டெல் நிறுவனம் அன்லிமிடெட் டேட்டா சேவையை 40 எம்.பி.பி.எஸ் வேகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர்

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர்

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்கள் ரூ.799 முதல் தொடங்குகின்றன என்று தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், நிறுவனம் தற்போது பல்வேறு நகரங்களில் ரூ.699 விலையில், 40 எம்.பி.பி.எஸ் பிராட்பேண்ட் திட்டத்தை வழங்கி வருகிறது. ஆனாலும் இவை சில நிபந்தனைக்கு உட்பட்டது.

நிபந்தனை என்னதெரியுமா?

நிபந்தனை என்னதெரியுமா?

ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த அன்லிமிடெட் டேட்டா சேவை திட்டம் 40 எம்.பி.பி.எஸ் வேகத்தில் மாதம் ரூ.699 என்ற விலையில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டம் மூன்று அல்லது அதற்கும் மேலான மாத கால சந்தாவாக மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவை சுற்றி கண்ணுக்கு தெரியாத புவியூர்ப்பு அலைகள்! வசீகர புகைப்படம்..ஆஸ்திரேலியாவை சுற்றி கண்ணுக்கு தெரியாத புவியூர்ப்பு அலைகள்! வசீகர புகைப்படம்..

இத்திட்டத்திற்கு சலுகையும் உள்ளது

இத்திட்டத்திற்கு சலுகையும் உள்ளது

இத்திட்டத்தின் சிறப்பே பயனர்களுக்கு மாதம் சுமார் 3.3 டிபி அன்லிமிடெட் டேட்டா, 40 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வெறும் ரூ.2097 என்ற விலையில் கிடைக்கிறது. அதேபோல் இத்திட்டத்தின் 6 மாத கால சந்தா மற்றும் 12 மாத கால சந்தா திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு 10% மற்றும் 15% தள்ளுபடியையும் ஏர்டெல் வழங்குகிறது.

ஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.! என்ன தெரியுமா?ஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.! என்ன தெரியுமா?

1 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் டேட்டா

1 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் டேட்டா

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்கள் ரூ.799 முதல் துவங்கி ரூ.3,999 வரை செல்கின்றன, குறிப்பாக 1 ஜி.பி.பி.எஸ் வரை வேகத்தை வழங்குகிறது. ஏர்டெல்லிலிருந்து 1 ஜி.பி.பி.எஸ் வரம்பற்ற தரவுத் திட்டம் இப்போது மிகச் சிறந்த திட்டமாகும், நல்ல FUP வரம்பு மற்றும் பல்வேறு OTT சேவை சந்தாக்களுடன் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Airtel Xstreme Fiber Rs 699 Price-Unlimited Data Happy Customers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X