Home
News

Airtel அதிரடி.. 6GB டேட்டா.. 600 SMS.. 70 நாள் எக்ஸ்டரா வேலிடிட்டி.. எந்த திட்டம்? என்ன விலை?

பாரதி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் தனது மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தின் சேவை வேலிடிட்டியை (validity) 70 நாட்களாக உயர்த்தியுள்ளது. இந்த திட்டம் இதற்கு முன்பு 56 நாட்கள் வேலிடிட்டியுடன் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் மற்ற நன்மைகள் அப்படியே இருக்கிறது. நன்மைகளை பொறுத்தவரையில் எந்தவித மாற்றத்தையும் ஏர்டெல் நிறுவனம் மேற்கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இது எந்த திட்டம்? இதன் விலை என்பதை பார்க்கலாம்? ஜியோவுக்கு (Jio) போட்டியாக ஏர்டெல் (Airtel) நிறுவனம் இத்தகைய மாற்றத்தை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த குறைந்த விலை அதிக வேலிடிட்டி திட்டம் தான் ரூ. 395 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 395 Prepaid Plan) திட்டம். இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி தற்போது 70 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஏர்டெல் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த திட்டம் தற்போது கூடுதலாக இரண்டு வார எக்ஸ்ட்ரா நன்மையை பெறுகிறது.

Airtel அதிரடி.. 6GB டேட்டா.. 600 SMS.. 70 நாள் எக்ஸ்டரா வேலிடிட்டி..

ஏர்டெல் ரூ. 395 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 395 Prepaid Plan):

ஏர்டெல் வழங்கும் ரூ.395 திட்டத்தில் வரம்பற்வாய்ஸ் கால்ஸ் அழைப்பு (Unlimited Voice calls) நன்மை, இது 600 எஸ்எம்எஸ் (SMS) மற்றும் 6ஜிபி டேட்டா (6GB Data Benefits) போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் உங்களுக்கு தினசரி டேட்டா நன்மையை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. இது வரமபற்ற மொத்த டேட்டா நன்மையாகும். இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் இந்த திட்டத்திற்கான வரவேற்பு எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறது. இது 56 நாட்களில் இருந்து 70 நாட்கள் வேலிடிட்டிக்கு இப்போது அதிகரிக்கப்படுகிறது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு சற்று மலிவாகிவிட்டது. இப்போது அதே விலையில் இன்னும் இரண்டு வார சேவை செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது.

இருப்பினும், ஜியோவின் ரூ.395 திட்டம், ஏர்டெல்லின் திட்டத்தை விட மிக சிறப்பாக உள்ளது. ஏனெனில் இது 5G டேட்டாவுடன் 14 நாட்கள் கூடுதல் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. ஆம், ஜியோவின் ரூ. 395 த்டிம் மொத்தமாக 84 நாள் வேலிடிட்டியை வழங்குகிறது. இதில் கூடுதல் சிறப்பாக ஜியோ அன்லிமிடெட் 5ஜி இலவச டேட்டா நன்மையையும் இத்துடன் வழங்குகிறது.

ஏர்டெல்லை விட ஜியோவின் ரூ. 395 திட்டம் ஏன் சிறந்தது?

ஏர்டெல் ரூ. 395 திட்டத்தை பொறுத்த வரை, கூடுதல் நன்மைகள் என்று உங்களுக்கு Apollo 24|7 Circle, இலவச Hellotunes மற்றும் Wynk Music உட்பட சில ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளும் கிடைக்கிறது. குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த ஏர்டெல் ரூ. 395 ப்ரீபெய்ட் திட்டம் சிறந்த தேர்வாகும். இருப்பினும், ஜியோவுடன் ஒப்பிடுகையில் ஏர்டெல் பெரியளவு நன்மையை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel Extended Rs 395 Prepaid Plan With 70 Days Of Validity Jio Rs 395 Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X