Home
News

வந்தது டபுள் 5ஜி.. Airtel சிம் போட்டு தினமும் 5G நெட்வொர்க் யூஸ் பண்றீங்களா.. அப்போ ஒரு குட் நியூஸ்!

நீங்கள் ஏர்டெல் சிம் கார்டு வழியாக ஏர்டெல்லின் 5ஜி நெட்வொர்க்கை (Airtel 5G Network) பயன்படுத்துகிறீர்களா.. ஆம் என்றால் உங்களுக்கு ஒரு குட் நியூஸ். அது என்னவென்றால் ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி நெட்வொர்க்கை 5ஜி அட்வான்ஸ்டு (5G Advanced) ஆக மாற்ற தொடங்கி உள்ளது.

இதன்கீழ் நான்-ஸ்டென்ட் அலோன் (Non Standalone - NSA) + ஸ்டேன்ட் அலோன் (SA - Standalone) மாடலை பயன்படுத்தி டூயல்-மோட் 5ஜி நெட்வொர்க் (Airtel Dual Mode 5G network) செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு (ஜூலை-செப்டம்பர்) 2025 வருவாய் முதலீட்டாளர் அழைப்பின் போது இந்த தகவல் வெளியிடப்பட்டது.

வந்தது டபுள் 5ஜி.. Airtel 5G நெட்வொர்க் யூஸ் பண்றீங்களா.. குட் நியூஸ்!

இதனால் ஏர்டெல் 5ஜி யூசர்களுக்கு என்ன பயன்? 5ஜி என்எஸ்ஏ நெட்வொர்க் (5G NSA Network) ஆனது ஏர்டெல் நிறுவனத்தின் தற்போதைய 4ஜி உள்கட்டமைப்பை பயன்படுத்துகிறது. இது ஏர்டெல்லின் 4ஜி எல்டிஇ நெட்வொர்க்கில் 5ஜி இன்டர்பேஸை வைப்பதன் மூலம் அதிக வேகத்தை வழங்க அனுமதிக்கிறது.

மறுகையில் உள்ள எஸ்ஏ (SA) என்பது பெயர் குறிப்பிடுவது போல ஒரு தனித்துவமான 5ஜி உள்கட்டமைப்பில், பிரத்யேக உபகரணங்கள் மற்றும் நெட்வொர்க் இன்டர்பேஸை பயன்படுத்தி 5ஜி நெட்வொர்க்கை வழங்குகிறது. என்எஸ்ஏ + எஸ்ஏ ஆகிய இரண்டையும் இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு "இரு பிரிவிலும்" சிறந்தது கிடைக்கும். அதாவது அதிக வேகம் மற்றும் நிலையான நெட்வொர்க் கிடைக்கும்.

ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கோபால் விட்டல், ஏர்டெல் நிறுவனம் ஆனது அதன் பிக்ஸடு வயர்லெஸ் அக்சஸ் (Fixed wireless access - FWA) வாடிக்கையாளர்களை டூயல்-மோட் 5ஜி-க்கு மாற்ற தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். என்எஸ்ஏ + எஸ்ஏ நெட்வொர்க் மாதிரியில் இயங்கும் டூயல்-மோட் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏர்டெல் நிறுவனமானது அதன் 5ஜி அட்வான்ஸ்டு செயல்முறையையும் தொடங்கியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 13 வட்டங்களில் உள்ள ஏர்டெல் 5ஜி சந்தாதாரர்கள் எஸ்ஏ உடனான டூயல்-மோட் 5ஜி நெட்வொர்க்கில் உள்ளதாக கோபால் விட்டல் கூறியுள்ளார். மேலும் என்எஸ்ஏ + எஸ்ஏ 5ஜி நெட்வொர்க்கிற்கான பைலட் திட்டம் ஏற்கனவே "இரண்டு வட்டங்களில்" நடந்து வருகிறது. ஏர்டெல்லின் 5ஜி போக்குவரத்து அதிகரிக்கும் போது, ​ஏர்டெல் நிறுவனம் வரும் மாதங்களில் டூயல்-மோட் 5ஜி நெட்வொர்க்கை வணிக ரீதியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கோபால் விட்டால் தெரிவித்துள்ளார்.

ஏர்டெல், எரிக்சன் மற்றும் வால்வோ குழுமம் இந்தியாவில் ஒரு ஆராய்ச்சி கூட்டாண்மையை அறிவித்த சில மாதங்களுக்கு பிறகு இந்த அறிவிப்பு வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் (மார்ச் மாதத்தில்) ஏர்டெல், எரிக்சன் மற்றும் வால்வோ குழுமம் ஆகியவைகள் ஒரு கூட்டணியை அறிவித்து இருந்தன.

இந்த கூட்டணி - ஏர்டெல்லின் 5ஜி அட்வான்ஸ்டு நெட்வொர்க்கிற்காக எக்ஸ்டென்டட் ரியாலிட்டி (XR), டிஜிட்டல் ட்வின் தொழில்நுட்பங்கள் மற்றும் ஏஐ ஆகியவற்றின் திறனை ஆராய்ச்சி செய்ய உள்ளதாக அறிவித்து இருந்தது. இந்த ஆராய்ச்சி கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, ஏர்டெல் அதன் 5ஜி அட்வான்ஸ்டு நெட்வொர்க்கை தொழில்துறை எக்ஸ்ஆர் ஆப்களுக்கு பயன்படுத்த தொடங்கி உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

டிஜிட்.இன் தளத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, புரோக்கரேஜ் நிறுவனமான ஆக்சிஸ் கேபிடல் (Axis Capital) மற்றும் ஆய்வாளர் கௌரவ் மல்ஹோத்ரா (Gaurav Malhotra) ஆகியோர்கள் - டிசம்பர் 2025 முதல் ஜூன் 2026 க்குள் ரீசார்ஜ் கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் என்று கணித்துள்ளனர்.

கம்யூனிகேஷன்ஸ் டுடேவின் (Communications Today) அறிக்கையின் படி, ஜேபி மோர்கனின் (JP Morgan) கூற்றுப்படி, ஜியோவின் ஐபிஓவுக்கு முன் ஒரு மூலோபாய நடவடிக்கையாக 15% வரை சாத்தியமான விலை உயர்வு அமலுக்கு வரலாம். மேலும் கடந்த கால போக்குகளை கருத்தில் கொண்டு, சந்தேகத்திற்கு இடமின்றி ஜியோவை தொடர்ந்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் விலை உயர்வை பின்பற்றும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Dual Mode 5G Network Will Soon Roll Out to Customers What Will Change After That
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X