ஏர்டெல் டிடிஎச், பிராட்பேண்ட், போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு இலவச 5ஜிபி தரவு.!
ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிரான போட்டி முனைப்பில் தனது டிடிஎச், பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு புதிய சலுகை ஒன்றை ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது.
கடந்த சில மாதங்களாக பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு பல நுழைவு நிலை திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இப்போது ஏர்டெல் டிடிஎச், பிராட்பேண்ட், மற்றும் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவசமாக கூடுதலாக 5ஜிபி தரவு பெறும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவின் சிறந்த நெட்வர்க் ஆன ஏர்டெல் தனது பயனர்களுக்கு பல திட்டங்களையும் இலவச தரவுகளையும் வழங்கி அதன் ப்ரீபெய்ட் பயனர்களை தக்கவைத்துக் கொண்டது. இப்போது இந்த தொலை தொடர்பு ஆப்ரேட்டர் சமீபத்தில் ஏர்டெல் டிடிஎச், பிராட்பேண்ட், மற்றும் போஸ்ட்பெய்டு பயனர்களுக்காக "மை ஹோம் ரீவார்ட்ஸ்" என்ற திட்டமொன்றை அறிமுகப்படுத்தியது.

5 ஜிபி
இந்தச் மைஹோம் ரீவார்ட்ஸ் சலுகையின் கீழ், ஏர்டெல் பயனர்கள் தங்கள் கணக்கில் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 5 ஜிபி அளவிலான தரவு வரவு வைக்கப்படும். அதை பெறுவது எப்படி என்பதை பின்வரும் வழிமுறைகளில் தெரிந்துக் கொள்ளலாம்.!

வழிமுறை #01
உங்கள் ஏர்டெல் டிடிஎச், பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட்பெய்டு இணைப்புகளில் ஏர்டெல் வழங்கும் மைஹோம் ரீவார்ட்ஸ் சலுகையை பெற நீங்கள் மைஏர்டெல் ஆப் சென்று உங்களின் ஏர்டெல் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்யவும்.

வழிமுறை #02
நீங்கள் உங்களின் மைஏர்டெல் ஆப்பில் லாக் இன் செய்த பின்னர், உங்கள் பெயர் மற்றும் கடவுச்சொல் அளித்து பயனர் தங்கள் ஏர்டெல் போஸ்ட்பெய்டுக்குள் அல்லது டிடிஎச்-க்குள் உள்நுழைய முடியும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #03
இந்த வழக்கில் உங்களுக்கு ஒரு அக்கவுண்ட் இல்லையெனில் நீங்கள் எளிதாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள முடியும். மறுபக்கம் நீங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொண்டு உள்நுழைந்த பிறகு, இப்போது நீங்கள் செய்ய வேண்டியது அனைத்தும் மைஹோம் ரீவார்ட்ஸ் சலுகைக்கான கோரிக்கையை எஸ்எம்எஸ் மூலம் உறுதிப்படுத்த முடியும்.

வழிமுறை #04
ஒருமுறை திட்டம் உறுதி செய்யப்பட்டபிறகு பயனர் கணக்கில் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 5ஜிபி அளவிலான தரவு வரவு வைக்கப்படும். எந்த விதமான கண்டிப்பான தரவு வரம்பும் இல்லாமல் பயனர்கள் ப்ரவுஸிங் செய்ய அனுமதிக்கப்படும்.

ஆஃபர் வரம்புகள்
#1 ப்ரீபெயிட் பயனர்கள் இந்த திட்டத்தை பெற முடியாது.
#2 திட்டம் திறமையாக வேலை செய்ய இந்த வாய்ப்பை ஆக்டிவேட் செய்வது அத்தியாவசியமானதாகும்.

மேலும் படிக்க
3ஜிபி வோடபோன் 3ஜி/4ஜி வரம்பற்ற குரல் அழைப்புகள் ரூ.297/-க்கு.!


Click it and Unblock the Notifications