ஏப்ரல் 1 முதல் "மெல்ல மெல்ல" இலவசங்களை வழங்க ஏர்டெல் திட்டம்.!

ரிலையன்ஸ் ஜியோ என்று அதன் இலவச சேவைகளை முடித்துக் கொள்கிறதோ அதே நாளில் இருந்து ஏர்டெல் அதன் இலவச சேவைகளை "மெல்ல மெல்ல" ஆரம்பிக்கிறது.

|

இன்னும் சிறிது காலத்தில் ரிலையன்ஸ் ஜியோ சேவையின் இலவச சேவைகள் முடிவுக்கு வரவுள்ளது இருப்பினும் மக்களிடம் உள்ள இலவசங்கள் மீதான ஆர்வம் இன்னும் அடங்கியதாய் தெரியவில்லை. எப்படி அடங்கும் - நாம் அனைவருமே ருசி கண்ட பூனையாகி விட்டோம். தொலைத்தொடர்பு துறையிடம் இருந்து அடுத்தது என்ன இலவசமாக கிடைக்கும் என்பது தான் நமது மறைமுக நோக்கமாக, எதிர்பார்ப்பாக உள்ளது என்பதை யாருமே மறுத்து விட இயலாது.!

அதை யார் நன்றாக புரிந்து கொண்டார்களோ இல்லையோ - ஏர்டெல் நிறுவனம் புரிந்து கொண்டது போலும். ரிலையன்ஸ் ஜியோ என்று அதன் இலவச சேவைகளை முடித்துக் கொள்கிறதோ அதே நாளில் இருந்து ஏர்டெல் அதன் இலவச சேவைகளை ஆரம்பிக்கிறது.

எந்த பிரீமியமும் இருக்காது

எந்த பிரீமியமும் இருக்காது

அதாவது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடனான போட்டியின் ஒரு பகுதியாக பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் நெட்வொர்க் வாடிக்கையாளர்ககளுக்கான தேசிய ரோமிங் இலவச உள்வரும் அழைப்புகள் / எஸ்எம்எஸ் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகளுக்கு எந்த பிரீமியமும் இருக்காது என்று அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1-ஆம் தேதி

ஏப்ரல் 1-ஆம் தேதி

2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி, பார்தி ஏர்டெல் நிறுவனம் ரோமிங்களுக்கு எந்த கூடுதல் தரவுக் கட்டணங்களும் இருக்காது என்றும் அறிவித்துள்ளது.

ஹோம் டேட்டா கட்டண திட்டங்களிலேயே

ஹோம் டேட்டா கட்டண திட்டங்களிலேயே

இனி வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதுமான பயனை அனுபவிக்க அவர்களின் ஹோம் டேட்டா கட்டண திட்டங்களிலேயே பெறலாம் என்கிறது இந்தியாவின் மிகப்பெரிய தொலை தொடர்பு ஆப்ரேட்டரான ஏர்டெல்.!

99 சதவிகிதமும்

99 சதவிகிதமும்

அழைப்பு கட்டணங்கள் 90 சதவீதம் வரை குறைந்துள்ளது அதாவது நிமிடத்திற்கு ரூ.3/- என்றும், டேட்டா கட்டணம் 99 சதவிகிதமும் அதாவது ஒரு எம்பிக்கு ரூ.3/- என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.!

செல்லுபடி

செல்லுபடி

ஏற்கனவே உலகம் முழுவதும் அனைத்து முக்கிய நாடுகளிலும் "மலிவான" சர்வதேச ரோமிங் கட்டண திட்டங்கள் தொடங்கப்பட்டு விட்டன என்று ஏர்டெல் கூறியுள்ளது. இந்த கட்டண திட்டங்கள், இலவச உள்வரும் அழைப்புகள் / எஸ்எம்எஸ் உட்பட 1 நாள், 10 நாட்கள் அல்லது 30 நாட்கள் செல்லுபடியாகும் விருப்பங்களின் கீழ் வெளியாகும் என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது.

வெளிப்படை

வெளிப்படை

ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தியா முழுவதிலுமான அழைப்புகளை இலவசமாக வழங்கவுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே அதற்கு சரியான போட்டியை கொடுக்கும் முனைப்பில் தான் ஏர்டெல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது வெளிப்படை.!

குறிப்பிட்ட நாட்டின்

குறிப்பிட்ட நாட்டின்

இந்த புதிய திட்டமானது சர்வதேச ரோமிங் அழைப்புகளை நிகழ்த்தும் வாடிக்கையாளர்களின் கட்டணத்தை குறைக்க உதவும். ஏப்ரல் 1, 2017 தொடங்கி சர்வதேச ரோமிங் நிகழ்த்த ஏர்டெல் வாடிக்கையாளர்கள் எந்த "ஒரு கட்டண திட்டமும் (சர்வதேச ரோமிங்)" இல்லாமல் குறிப்பிட்ட நாட்டின் டெய்லி பேக் மூலம் தொலைபேசி கட்டணங்களை குறைக்கலாம் என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது. அதாவது ஒரு வாடிக்கையாளரின் பில் ஆனது குறிப்பிட்ட நாட்டின் ஒருநாள் பெட்டியின் விலையை அடையும் தருணம் வரும் பொது வாடிக்கையாளர் தானாகவே அந்த பேக்கிற்கு நகர்த்தப்படுவர் என்று அர்த்தம்.

உதாரணத்திற்கு

உதாரணத்திற்கு

உடன் பேக் நன்மைகள் முடிந்த பின்னரும் கூட வாடிக்கையாளர்கள் அழைப்பு மற்றும் தரவு பயன்பாடு மீதான மிகவும் கவர்ச்சிகரமான விலைக்குறைப்பை தொடர்ந்து அனுபவிப்பார்கள். உதாரணத்திற்கு எந்த கட்டண சேவையும் இல்லாமல் அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் ஒரு வாடிக்கையாளர் ரூ.649/- என்ற ஒரு நாள் அமெரிக்க பேக் விலையை எட்டும்போது அவர் தானாகவே குறிப்பிட்ட ஒரு நாள் பேக்கின் வரும் இலவச உள்வரும் அழைப்புகள் / எஸ்எம்எஸ், 100 நிமிட இந்திய மற்றும் உள்ளூர் நாட்டின் அவுட் கோயிங் நிமிடங்கள், 300 எம்பி தரவு ஆகிய சேவைகளை அனுபவிக்க முடியும். இதேபோல், சிங்கப்பூருக்கு ஒரு வாடிக்கையாளர் பயணம் மேற்கொன்டுட ரூ.499/- என்ற கட்டண திட்டத்தை அவர் பில் நெருங்க குறிப்பிட்ட திட்டத்தின் நன்மைகளை அவர் அனுபவிப்பார்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஆபர்களின் வேலிடிட்டியை குறைத்த ஏர்டெல், பயனர்கள் அதிர்ச்சி.!

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel Drops Roaming Charges On Calls, Data. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X