Home
News

இனி ரூ.299 இல்லை ரூ.349 கொடுங்க! சத்தமின்றி மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கிய ஏர்டெல்..

டெலிகாம் நிறுவனங்கள் விரைவில் ப்ரீபெய்ட் திட்டங்களை உயர்த்தலாம் என சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தற்போது சத்தமின்றி ஒரு மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

அதாவது ஏர்டெல் நிறுவனம் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை தான் நீக்கியுள்ளது. தற்போது இணையதளம் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ்-ஆப் என இரண்டிலும் இந்த திட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதுவரை ஏர்டெல்லின் குறைந்தபட்ச ரீசார்ஜ் பிளானாக இருந்து வந்த ரூ.299-க்கு பதில் இனி ரூ.349 திட்டம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சத்தமின்றி மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கிய ஏர்டெல்.

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs.299 Prepaid Plan) தினமும் 1 ஜிபி டேட்டா (Daily 1 GB Data) நன்மையை வழங்கியது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தம் 28ஜிபி டேட்டா கிடைத்தது. அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 64 கேபிபிஎஸ்-ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் (Unlimited Local STD Roaming Calls) ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைத்தது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா உள்ளிட்ட பல சலுகைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைத்தது. இந்நிலையில் இந்த ஏர்டெல் ரூ.299 திட்டம் நீக்கப்பட்டுள்ளது. எனவே இனி ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம். இப்போது ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs.349 Prepaid Plan) தினமும் 1.5 ஜிபி டேட்டா (Daily 1.5 GB Data) நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தம் 42ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 64 கேபிபிஎஸ்-ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) போன்ற நன்மைகளும் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.

அதேசமயம் சமீபத்தில் ரூ.200 திட்டத்தில் சில கூடுதல் சலுகைகள் வழங்கி உள்ளது ஏர்டெல் நிறுவனம். அதாவது ஏர்டெல் ரூ.200 திட்டம் (Airtel Rs 200 Pack) ஆனது தற்போது புதிதாக அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் மற்றும் ZEE5 பிரீமியம் சந்தாக்களையும் சேர்த்துள்ளது. இதன் மூலம் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மேலும் ஒரு விரிவான பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

ஏர்டெல் ரூ.200 திட்டம் மூலம் ஜியோஹாட்ஸ்டார் சந்தா 28 நாட்களுக்கு கிடைக்கும். இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

சத்தமின்றி மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கிய ஏர்டெல்.

குறிப்பாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 18க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.

ஏர்டெல் ரூ.200 திட்டம் மொத்தமாக 30ஜிபி டேட்டா வழங்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கப்படவில்லை. எனவே ஏற்கனவே, ஆக்டிவில் இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஓடிடி சந்தா திட்டமாக இதை ஆட் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Airtel Discontinues Rs 299 Prepaid Plan; Cheapest Pack Now Starts at Rs 349
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X