Home
News

2026-க்கு இடியை இறக்கிய ஏர்டெல்.. சைலண்டாக ரீசார்ஜ் விலை உயர்வு.. 30 நாள் வேலிடிட்டியில் 2 திட்டங்கள் நீக்கம்!

ஏர்டெல் (Airtel) நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plans) விலையை ஏற்றாமல், அதற்கு நிகராக மலிவான விலைக்கு கிடைத்துவந்த திட்டங்களை நீக்கி வருகிறது. முன்னதாக ரூ.189 விலை கொண்ட திட்டம் நீக்கப்பட்டது. இப்போது, மேலும், 2 ஏர்டெல் திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது (2 Airtel Plans Removed). இந்த திட்டங்களின் விவரங்களை இப்போது பார்க்கலாம்

ஏர்டெல் ரூ.121 திட்டம் (Airtel Rs 121 Plan) மற்றும் ஏர்டெல் ரூ.181 திட்டம் (Airtel Rs 181 Plan) ஆகியவை இப்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகளை கொடுக்கும் திட்டமாக இருந்தது. ஆரம்பத்தில் ரூ.11 விலையில் இருந்து டேட்டா திட்டம் தொடங்கியது. பிறகு ரூ.11 திட்டம் நீக்கப்பட்டு, ரூ.22 விலை கொண்ட திட்டம் ஆரம்ப விலை திட்டமாக மாறியது.

2026-க்கு இடியை இறக்கிய ஏர்டெல்.. சைலண்டாக ரீசார்ஜ் விலை உயர்வு!

மொத்தமாக 13 டேட்டா திட்டங்கள் கொடுக்கப்பட்டன. இப்போது, 11 திட்டங்களாக குறைக்கப்பட்டு இருக்கின்றன. நேரடியாக விலையை மாற்றாமல், திட்டங்களை நீக்குவதால், வேறு வழியில்லாமல், மற்றொரு திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். இதையே ஏர்டெல் நிறுவனம் செய்துள்ளது. இப்போது, நீக்கப்பட்ட திட்டங்களில் கிடைத்த சலுகைகளை பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.121 திட்ட விவரங்கள் (Airtel Rs 121 Plan Details): இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. இந்த நாட்களில் 6 ஜிபி டேட்டா மற்றும் 2 ஜிபி கூடுதல் டேட்டா கொடுக்கப்பட்டது. ஆகவே, 8 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடிந்தது. ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் வழியாக இந்த கூடுதல் டேட்டா கொடுக்கப்பட்டது. இந்த டேட்டாவுக்கு பிறகு 1 எம்பிக்கு 50 பைசா கட்டணம் இருந்தது.

ஏர்டெல் ரூ.181 திட்ட விவரங்கள் (Airtel Rs 181 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா மட்டுமல்லாமல், ஓடிடி சலுகைகளும் கொடுக்கப்பட்டது. ஆகவே, 15 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ள முடிந்தது. மேலும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா கொடுக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டது.

இந்த திட்டங்கள் நீக்கப்பட்டுவிட்டதால், இனிமேல் மீதமிருக்கும் 11 திட்டங்களில் ஏதாவது ஒன்றை மட்டுமே ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். ஆகவே, ரூ.22 விலைக்கு ஆரம்ப விலை டேட்டா திட்டம் கிடைக்கிறது. இதில் 1 ஜிபி டேட்டா 1 நாள் வேலிடிட்டி கிடைக்கிறது. ரூ.33 டேட்டா திட்டத்தில் 2 ஜிபி டேட்டா மற்றும் 1 நாள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ரூ.49 விலை கொண்ட டேட்டா திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். இதை 1 நாளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஏர்டெல் ரூ.100 டேட்டா திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் 6 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். சோனிலிவ் உள்ளிட்ட 20+ ஓடிடி ஆப்களை ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தா மூலமாக பெற்று கொள்ளலாம்.

ரூ.161 விலை கொண்ட திட்டத்தில் 12 ஜிபி டேட்டா மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ரூ.195 டேட்டா திட்டத்தில் 12 ஜிபி டேட்டா மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதுபோக 1 மாதத்துக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே மூலமாக 20 ஓடிடி ஆப்களை பெற்று கொள்ளலாம். ரூ.361 திட்டத்தில் 50 ஜிபி டேட்டா, 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ரூ.99 திட்டத்தில் 2 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது. ரூ.26 திட்டத்தில் 1.5 ஜிபி டேட்டா, 1 நாள் வேலிடிட்டி வருகிறது. ரூ.77 திட்டத்தில் 5 ஜிபி டேட்டா, 7 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ரூ.279 திட்டத்தில் 1 ஜிபி டேட்டா, 1 மாத வேலிடிட்டி, ஜியோஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் சந்தா வருகிறது. இந்த திட்டங்கள் மட்டுமே இப்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Discontinues Rs 121 Plan Rs 181 Plan With 30 Days Validity Check Two Removed Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X